கொல்கத்தா சூழலில் அக்‌ஷரா படக் குழு கொண்டாட்டம்..

Advertisement

விஜய் ஆண்டனி, இயக்குநர் நவீன், நடிகை அக்‌ஷரா ஹாசன் மற்றும் “அக்னி சிறகுகள்” படத்தின் மொத்தப் படக்குழுவும் கொல்கத்தாவின் சூழலைக் கொண்டாடி எடுத்துக்கொண்ட செல்ஃபி சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் பெரும் வைரலாகி வருகிறது. படத்திற்குக் கிடைத்த வரவேற்பு மற்றும் தற்போது முழுப்படப்பிடிப்பும் முடிந்ததில் பெரும் மகிழ்ச்சியில் உள்ளது படக்குழு.

இயக்குநர் நவீன் இது குறித்துக் கூறியதாவது:உலகம் முழுவதுமே படப் பிடிப்பு செய்வது என்பதே தற்போது மிகவும் நெருக்கடியான சூழலாக இருந்து வருகிறது. படக்குழுவின் அயராத ஒத்துழைப்பே அனைவரும் இணைந்து இயங்குவதற்கு பெரும் ஊக்கமாக இருந்தது. “அக்னிச் சிறகுகள்” படத்திற்கு இப்படியானதொரு படக்குழு கிடைத்திருப்பதற்கு நான் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறன.

படத்தின் மிக முக்கியமான காட்சிகள் சிலவற்றைக் கொல்கத்தாவில் தற்போது படமாக்கினோம். இத்துடன் படத்தின் முழுப்டப்பிடிப்பும் முடிவடைந்துவிட்டது. விஜய் ஆண்டனி மற்றும் அக்‌ஷரா ஹாசன் இருவரும் காட்சிகளில் வெளிப்படுத்திய அற்புத நடிப்பில் அசந்து போனேன். படத்தின் மொத்த படப்பிடிப்புமே பேரனுபவமாக இருந்தது. படப்பிடிப்பு முடிந்த நிலையில் தற்போது உடனடியாக போஸ்ட் புரடக்‌ஷன் வேலைகள் துவக்கப்பட்டுவிட்டது. இந்நேரத்தில் படக்குழு அனைவருக்கும் தேவையான பாதுகாப்பு மற்றும் உடல் நலம் பேணும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அமைத்து தந்ததற்காக தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் டி. சிவா அவர்களுக்கு பெரும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மல்டி ஸ்டார் திரைப்படமாக உருவாகும் இப்படத்தில் அருண் விஜய், விஜய் ஆண்டனி அக்‌ஷரா ஹாசன், சம்பத், ஜே.சதீஷ்குமார், ரைமா சேனா செண்ட்ராயன் மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடிக்கிறார்கள். நடராஜன் சங்கரன் இசையமைக்கிறார். கே.எஸ். பாச்சா ஒளிப்பதிவு செய்ய, வெற்றிவேலன் கே. படத்தொகுப்பு செய்துள்ளார். கிஷோர் கலை இயக்கம் செய்ய, மகேஷ் மேத்யூ சண்டைப்பயிற்சி செய்துள்ளார். பரஞ்சோதி எக்சிக்யூட்டிவ் புரடியூசராக பணியாற்ற சௌபர்னிகா உடை வடிவமைப்பு செய்துள்ளார்.
மிகப்பெரும் பட்ஜெட்டில், இதுவரை தமிழ் சினிமா கண்டிராத பூலோகத்தின் வித்தியாசமான பல லொகே ஷன்களில் படமாக்கப்பட்டுள்ள, இப்படத்தை அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி. சிவா தயாரிக்கிறார். பரபரப்பான திரில்லராக, பல அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளுடன் இப்படம் படமாக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு இயக்குனர் கூறினார்.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?

READ MORE ABOUT :

/body>