மெரினா கடற்கரையை திறக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் மீண்டும் எச்சரிக்கை

by Balaji, Nov 18, 2020, 18:25 PM IST

மெரினா கடற்கரையை உடனடியாக திறக்காவி்ட்டால் உரிய உத்தரவை நீதிமன்றமே பிறப்பிக்கும் என உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.சென்னை மெரினா மீன் அங்காடிகளை முறைபடுத்துவது தொடர்பான வழக்குகள் கடந்த 11ந்தேதி விசாரிக்கப்பட்டது. அப்போது மெரினா கடற்கரையை திறப்பது குறித்து பல்வேறு கேள்விகளை நீதிபதிகள் எழுப்பினார். அதற்கு பதில் அளித்த தமிழக அரசு நவம்பர் இறுதி வரை மெரினாவை திறக்க வாய்ப்பில்லை என கூறியது. இதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், அனைத்து பொழுதுபோக்கு இடங்களும் திறக்கப்பட்ட நிலையில் மெரினாவை மட்டும் திறப்பதில் என்ன பிரச்சினை? மெரினாவை திறப்பது குறித்து சென்னை மாநகராட்சியும் தமிழக அரசு விரைவில் முடிவு எடுக்கவேண்டும். இல்லையேல் நீதிமன்றமே முடிவு செய்யும் என்று சொல்லி நவம்பர் 18-ம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்தனர்.

அதன்படி வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழகஅரசு சார்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் மெரினா கடற்கரை திறப்பது குறித்து டிசம்பர் முதல் வாரத்தில் முடிவு எடுக்கப்பட இருப்பதாக தெரிவித்தார். இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் மெரினா கடற்கரையை திறப்பது குறித்து டிசம்பர் முதல் வாரத்தில் முடிவு எடுக்கப்பட விட்டால் நீதிமன்றமே திறக்க நேரிடும் என தெரிவித்தனர். மேலும், மெரினாவில் தள்ளுவண்டிகள் தொடர்பான டெண்டர்கள் குறித்த பதிகள் அந்த டெண்டரில் 900 தள்ளுவண்டிகளை அமைப்பது தொடர்பான நடவடிக்கை மட்டும் தொடரலாம் என உத்தரவிட்டு வழக்கை வரும் டிசம்பர் 3-ம் தேதி ஒத்திவைத்தனர்.

More Tamilnadu News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை