பாராமுகமாக நடந்துக் கொள்ளும் மத்திய, மாநில அரசுகள்: கமல் ஆவேசம்

Apr 1, 2018, 18:41 PM IST

தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்து வரும் போராட்டத்தில் கலந்துக் கொண்ட மக்கள் மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக ஆவேசமாக பேசினார்.


தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும், ஆலையை விரிவாக்கம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அம்மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு கிராம மக்கள் கடந்த பிப்ரவரி மாதம் முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பல்வேறு கட்சிகளும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்று வரும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் கலந்துக் கொண்டார்.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன் இதுகுறித்து பேசியதாவது: மக்களின் உயிரைவிட காப்பர் வியாபாரம் முக்கியம் என நினைக்க வேண்டுமா ? அப்படி என்றால் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது தான் நல்லது. குடியிருப்பு, விவசாய பகுதிகளில் ஆலை அமைப்பது தவறு.

மத்திய அரசும், மாநில அரசும் ஸ்டெர்லைட் விவகாரத்தில் பாராமுகமாக நடந்து கொள்கின்றன. நான் செல்லும் இடமெல்லாம் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக பிரசாரங்கள் மேற்கொள்வேன். நான் புதிதாக விளம்பரம் தேட வேண்டிய அவசியம் இல்லை. ஐந்து வயதில் இருந்தே எனக்கு விளம்பரத்திற்கு பஞ்சம் இல்லை.
இவ்வாறு கமல் பேசினார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading பாராமுகமாக நடந்துக் கொள்ளும் மத்திய, மாநில அரசுகள்: கமல் ஆவேசம் Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை