நிலைநிறுத்திய சில மணிநேரங்களில் ஜிசாட் 6ஏ செயற்கைகோளுடனான தகவல் தொடர்பு துண்டிப்பு

Apr 1, 2018, 17:16 PM IST

ஜிஎஸ்எல்வி எப்8 ராக்கெட்டுடன் ஏவப்பட்ட ஜிசாட் 6 ஏ செயற்கைக் கோளுடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) தெரிவித்துள்ளது.

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த 29ம் தேதி மாலை 4.56 மணிக்கு ஜிஎஸ்எல்வி எப்8 ராக்கெட்டுடன் ஜிசாட் 6ஏ செயற்கை கோள் ஏவப்பட்டது. தகவல் தொடர்பு வசதிக்காகவும், பருவநிலை மாற்றத்தை அறிவதற்காகவும், பருவநிலை மாற்றதை அறிவதற்காகவும் தயாரிக்கப்பட்ட இந்த செயற்கைகோள் ஏவப்பட்டு 17 நிமிடங்களில் அதன் சுற்றுப்பாதையில் சரியாக நிலை நிறுத்தப்பட்டது.

10 ஆண்டுகள் ஆயுட்காலம் கொண்ட இந்த செயற்கைக்கோள் 2,140 கிலோ எடை கொண்டது. செயற்கைக்கோள் நிலைநிறுத்தி இரண்டு நாட்கள் ஆன நிலையில், இன்று செயற்கைகோள் உடனான தகவல் தொடர் துண்டிக்கப்பட்டு உள்ளதாக இஸ்ரோ சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதைதொடர்ந்து, செயற்கைகோள் உடனான தகவல் தொடர்பை ஏற்படுத்த முயற்சிகள் நடந்துவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த சிவன் பதவிஏற்ற பிறகு ஏவப்பட்ட முதல் ராக்கெட் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading நிலைநிறுத்திய சில மணிநேரங்களில் ஜிசாட் 6ஏ செயற்கைகோளுடனான தகவல் தொடர்பு துண்டிப்பு Originally posted on The Subeditor Tamil

More Akkam pakkam News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை