வாக்காளர் பட்டியல்: பார்வையாளராக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்

by Balaji, Nov 20, 2020, 14:11 PM IST

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் பார்வையாளர்களாக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் இதற்கான உத்தரவைத் தேர்தல் ஆணையம் பிறப்பித்துள்ளது.தமிழகத்தில் கடந்த திங்கட்கிழமை வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.இதைத்தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் நீக்கம் உள்ளிட்ட சீர்திருத்தங்களுக்குச் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது. இந்த நிலையில் வாக்காளர் பட்டியல் பார்வையாளர்களாக மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை மாவட்ட வாரியாக தேர்தல் ஆணையம் நியமனம் செய்துள்ளது. இந்த அதிகாரிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களுக்குச் சென்று வாக்காளர் பட்டியல் சார்ந்த புகார்களைப் பற்றி ஆய்வு செய்வர்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு அதுல் ஆனந்த் , விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு கிர்லோஷ்குமாரும் மதுரை, தேனி, விருதுநகர், மாவட்டங்களுக்கு சிஜிதாமஸ் வைத்யன் ஆகியோரும் நாகை, தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களுக்குச் சண்முகமும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.நாமக்கல், கரூருக்கு சிவசண்முகராஜா கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மாவட்டங்களுக்கு ஜோதி நிர்மலா சாமி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு மா.வள்ளலாரும் ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டைக்கு ஆபிரகாம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களுக்குக் கருணாகரன் மற்றும் அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கடலூர் மாவட்டங்களுக்கு சஜ்ஜன்சிங் ரா.சவன் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

More Tamilnadu News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை