திருவண்ணாமலை தீபத் திருவிழா கொடியேற்றம்.. ஆளுங்கட்சி பிரமுகரின் அடாவடி

அமைச்சர் வருமுன்பே கொடி ஏற்றுவது ஏன் என அறநிலையத் துறை அதிகாரிகளிடம் அதிமுக பிரமுகர் ஒருவர் கோபப்பட்டது திருவண்ணாமலையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

by Balaji, Nov 20, 2020, 13:35 PM IST

பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை கோவிலில் கார்த்திகை தீபத்தை ஒட்டி இன்று காலை கொடியேற்ற வைபவம் நடந்தது. இந்நிகழ்ச்சியில் அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கலந்துகொள்வதாக இருந்தது ஆனால் அமைச்சர் வருவது தாமதமானதால் திட்டமிட்டபடி உரிய நேரத்தில் கோவிலில் பூஜைகள் செய்யப்பட்டு கொடியேற்ற வைபவம் நடந்தது. இந்த நிகழ்ச்சி முடிந்த சிறிது நேரத்தில் அமைச்சர் தனது ஆதரவாளர்களுடன் கோவிலுக்கு வந்தார் அதற்குள் குடியேற்றுவது முடிந்துவிட்டது அடைந்து அமைச்சரின் முகம் மாறியது. அப்போது அமைச்சரை வரவேற்க வந்த கோவில் இணை ஆணையர் ஞானசேகர் மற்றும் சிவாச்சாரியர்களிடம் அதிமுக நகர செயலாளர் செல்வம் அமைச்சர் வருவதற்கு முன்பாக இப்படி குடி ஏற்றலாம் என்று கடுமையாக கோபப்பட்டு வாக்குவாதம் செய்தார்.

ஆகமவிதிப்படி திட்டமிட்டபடி உரிய நேரத்தில் விழா நடத்தப்பட வேண்டும் அதுதான் நல்லது என்று சிவாச்சாரியார்கள் அவருக்கு எடுத்துரைத்தனர். ஆயினும் அதை காதில் வாங்கிக் கொள்ளாத அந்தப் பிரமுகர் தொடர்ந்து அதிகாரிகளிடம் அடாவடியாக வாக்குவாதம் செய்து கொண்டிருந்தார். பின்னர் அமைச்சர் தலையிட்டு அவரை சமாதானப்படுத்தினார். இந்த சம்பவம் அங்கு வந்திருந்த பக்தர்களை அதிர்ச்சியடைய வைத்தது. ஐயர் வரும் வரைக்கும் அமாவாசை காத்திருக்குமா என்ற பழமொழி இவர்களுக்கு தெரியுமா? தெரியாதா? அமைச்சர் வரும்வரை ஆலய நிகழ்ச்சிகள் ஏன் நிறுத்தப்படவேண்டும்? வேண்டும் என்று சில பக்தர்கள் கோபத்துடன் கேள்வி எழுப்பினர். இன்னும் சிலரோ அண்ணாமலையார் பார்த்துக்கொள்வார் நமக்கு எதற்கு வம்பு என்று படி அமைதியாக கலைந்து சென்றனர்.

You'r reading திருவண்ணாமலை தீபத் திருவிழா கொடியேற்றம்.. ஆளுங்கட்சி பிரமுகரின் அடாவடி Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை