கன்னட சூப்பர் ஸ்டாரை இயக்கும் கோலிவுட் இயக்குனர்.. அஞ்சலி ஜோடி போடுகிறார்..

by Chandru, Nov 20, 2020, 13:34 PM IST

'கோலி சோடா' மூலம் தமிழ் சினிமாவில் டைரக்டராக, தனக்கென்று ஒரு அடையாளத்தைப் பெற்றவர் ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன். அந்த அடையாளத்தோடு கன்னட திரையுலகில் நுழைகிறார். கன்னடத்தில் வெற்றி இணையான சிவராஜ் குமார் மற்றும் டாலி தனஞ்செயாவை இயக்குகிறார். இப்படத்தில் சிவராஜ் குமார் ஜோடியாக அஞ்சலி நடிக்கிறார். கன்னடத்தில் இப்பொழுது பிரபலமாக பேசப்பட்டு வரும் நடிகர் டாலி தனஞ்செயா இன்னொரு வேடத்தில் நடிக்கிறார். மேலும் ப்ரதீவ், உமாஸ்ரீ மற்றும் பலர் நடிக்கிறார்கள். இப்படத்தைத் தமிழில் 'கோலி சோடா', 'கடுகு' போன்ற படங்களைத் தயாரித்த ரஃப்நோட் நிறுவனம், கன்னடத்தில் கிருஷ்ண சர்த்தக்ன் கிருஷ்ணா கிரியேஷன்ஸ் பட நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறது. கதை, திரைக்கதை, எழுதி ஒளிப்பதிவு செய்து இயக்குகிறார்.

எஸ்.டி.விஜய்மில்டன், ஜெ.அனூப் சீலின் இசை அமைக்கிறார். பிரகாஷா புட்டசாமி கலை இயக்குநராக பணிபுரிகிறார். சுப்ரீம் சுந்தர் சண்டை பயிற்சி செய்கிறார். Pro ஜான்சன்
இப்படத்தின் பூஜை பெங்களூரில் இன்று நடந்தது. வரும் 23ஆம் தேதி முதல் படப்பிடிப்பு பெங்களூரில் சான்ஸ்க்ரிட் ( Sanskrit collage ) கல்லூரியில் ஆரம்பமாகிறது. படப்பிடிப்பு பெங்களூரில் 40 நாட்கள் தொடர்ந்து நடைபெறும். நடிகை அஞ்சலி தமிழில் அங்காடி தெரு தொடங்கி எங்கேயும் எப்போதும் , கலகலப்பு உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் வாய்ப்பு குறைந்ததும் தெலுங்கில் நடிக்கச் சென்று தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். இவர் கன்னடத்திலும் ஹாங்கனசு, ரன விகரமா போன்ற படங்களில் நடித்திருக்கிறார். தற்போது தமிழில் பாவ கதைகள் படத்திலும் சில தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை