பிரபல ஹீரோயின் படத்துக்கு 2 கோடியில் கிளைமாக்ஸ்..

by Chandru, Nov 20, 2020, 13:31 PM IST

இயக்குனர் சுந்தர்.சி காமெடி படங்கள் இயக்குவதில் காமெடியுடன் ஹாரர் படங்கள் இயக்குவதில் கில்லாடி. அரண்மனை முதல் மற்றும் 2ம் பாகத்தை இயக்கி அளித்தவர் அடுத்து அரண்மணை 3ம் பாகம் இயக்குகிறார். முதல் இரண்டு பாகங்கள் பெரிய வெற்றி பெற்றன. அதன் தொடர்ச்சியாக இப்போது அரண்மனை 3 உருவாகி வருகிறது.இப்படத்திற்காக சென்னை இவிபி ஃபிலிம் சிட்டியில் 2 கோடி செலவில் கலை இயக்குநர் குருராஜ் கைவண்ணத்தில் பிரம்மாண்ட அரண்மனை செட் போடப்பட்டு அதில் சண்டைக் காட்சி படமாகியுள்ளது. முதன்முதலில் சுந்தர்Cயுடன் ஸ்டண்ட் இயக்குநர் பீட்டர் ஹெய்ன் இணைந்துள்ள இப்படத்தின் உச்சக்கட்ட சண்டைக் காட்சி பிரமாண்டமாக பதினொரு நாட்கள் படமாக்கப்பட்டது. இதுவரை சுந்தர்சியின் படங்களில் விஷால் தமன்னா நடித்த“ஆக்ஷன்” (action) படத்தில் அதிக ஸ்டண்ட் காட்சிகள் இருந்தது.

அதன் பிறகு இந்தப் படத்தில் தான் மிக பிரமாண்டமாக ஸ்டண்ட் அமைத்துள்ளார்கள். இந்த பேய்ப் படத்துக்கு 2 கோடி செலவில் பிரமாண்டமான அரண்மனை செட் அமைக்கப்பட்டு அதில் 11 நாட்கள் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் அமைக்கப்பட்டுப் படமாகியுள்ளது. திரையுலகில் பரபரப்பாகப் பேசப்படுகிறது. இக்காட்சியில், ஆர்யா, ராக்ஷி கன்னா, சுந்தர் சி, சம்பத், மதுசூதன் ராவ் ஆகியோர் நடித்தனர். தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. குஜராத் ராஜ்கோட், சென்னை மற்றும் பொள்ளாச்சி போன்ற இடங்களில் படபிடிப்பு நடை பெற்று வருகிறது.

2021ல் சம்மர் ஸ்பெஷலாக இந்தப் படம் வெளியாக உள்ளது. இதில் ஆர்யா, ராஷிகன்னா, சுந்தர் சி, ஆண்டிரியா, விவேக், யோகி பாபு, சாக்‌ஷி அகர்வால், சம்பத், மனோபாலா, வின்சன்ட் அசோகன், மதுசூதன் ராவ், வேல ராமமூர்த்தி, நளினி, விச்சு விஸ்வநாத், கோலபள்ளி லீலா மற்றும் பலர் நடிக்கின்றனர். சுந்தர் சி இயக்கும் இப்படத்தை யு.கே. செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். சி.சத்யா இசை அமைக்கிறார். எஸ்.ஃபென்னி ஆலிவர் எடிட்டிங் செய்கிறார். பொன்ராஜ் அரங்கம் அமைக்கிறார். பீட்டர் ஹெயின் சண்டை காட்சிகள் அமைக்கிறார். அவ்னி சினிமாஸ் தயாரிக்கிறது. பி. பாலகோபி தயாரிப்பு மேற்பார்வை செய்கிறார்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை