கோவில் அறங்காவலர்கள் நியமனம் : உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு

by Balaji, Nov 20, 2020, 15:19 PM IST

தமிழகத்தில் கோவில்களில் அறங்காவலர் குழு உறுப்பினராக நியமனம் செய்யப்பட உள்ளவர்களின் பெயர் பட்டியல், ஆன்மிகத்தில் அவருக்கு உள்ள பற்று, குற்றச் சம்பங்கள் தொடர்பு உள்ளதா என்பது உள்ளிட்ட விவரங்களை அறநிலையத்துறை ஆணையர்
தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த பெரிய நம்பி நரசிம்ம கோபாலன் என்பவர் தமிழகத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் அறங்காவலர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பை அந்தந்த கோவில்களில் முன் அனைவருக்கும் தெரியும் வகையில் வெளியிட வேண்டும் உரிய முறைகளைப் பின்பற்றி என் மனம் மேற்கொள்ளப்பட உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இந்து சமய அறநிலையத்துறை வழக்கறிஞர் , அறநிலையத்துறை விதிகளுக்கு உட்பட்டுத் தான் கோவில்களில் அறங்காவலர் நியமிக்கப்படுகின்றனர். கோவில்களில் அறல்காவலர் குழு நியமனம் செய்ய, 21 மாவட்டங்களில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதர மாவட்டங்களில் அமைக்கப்பட உள்ளது என்றார்.மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் , பல குற்றச் செயல்களில் தொடர்புடையவர்கள், வழக்கு உள்ளவர்கள் கூட அறங்காவலர்களாக நியமிக்கப்பட உள்ளனர் எனத் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து நீதிபதிகள், கோவில்களில் அறங்காவலர்கள் நியமனம் செய்ய, அமைக்கப்பட்டுள்ள குழுவில் இடம் பெற்றுள்ளவர்கள். பெயர் பட்டியல், கல்வி , ஆன்மிகத்தில் அவருக்குள்ள ஈடுபாடு, குற்ற சம்பவம் மற்றும் வழக்குகளில் அவருக்குத் தொடர்பு உள்ளதா என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள் இது குறித்த முழு விவரங்களை பதில் மனுவாகத் தாக்கல் செய்ய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டார். இதையடுத்து இந்த வழக்கின் விசாரணை வருகிற டிசம்பர் 4 ஆம் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

More Tamilnadu News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை