`படத்தில் வில்லன், நிஜத்தில் ஹீரோ... கோவளம் மக்களை காத்த நடிகர் பிரகாஷ் ராஜ்!

by Sasitharan, Nov 26, 2020, 19:14 PM IST

நிவர் புயலால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், நாகை, செங்கல்பட்டு உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் பாதிப்பு அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்து இருந்தது.

புயல் இன்று அதிகாலை 2.30 மணிக்கு பாண்டிச்சேரியின் வடக்குப் பகுதியான மரக்காணம் பகுதி அருகே கரையைக் கடந்ததது. இதனால் புயல் வருவதற்கு முன் எச்சரிக்கை நடவடிக்கையாக கடலோர மற்றும் ஆற்றோரப் பகுதியில் வசிக்கும் மக்களை அரசால் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனா்.

மேலும் அரசுக்கு உதவி செய்யும் வகையில் நடிகர் பிரகாஷ் ராஜ் களத்தில் இறங்கியுள்ளாா். இவர் ஏற்கனவே, தனது ஃபவுண்டேஷன் மூலம் கொரோனா சமயத்தில் ஏழை மக்களுக்கு அரிசி, மளிகைப் பொருட்கள் கொடுத்து உதவினார். பள்ளிகள் மறு சீரமைப்பு, பள்ளிகளுக்கு இலவச கழிப்பிட வசதி மற்றும் பட்டியலின மாணவியை வெளிநாட்டில் படிப்பதற்கான முழு படிப்புச் செலவையும் ஏற்றுக்கொண்டது என பல்வேறு உதவிகளை செய்து வருகிறார் நடிகர் பிரகாஷ் ராஜ்.

இந்த நிலையில் பிரகாஷ்ராஜ் தற்போது புயல் காரணாமாக சென்னை அருகே உள்ள கோவளத்தில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை தனது ஃபவுண்டேஷன் மூலம் தங்கவைத்து அவர்களுக்கு உணவு மற்றும் தேவையான உதவிகளை செய்து வருகிறாா். அதன் பின்னா் தனது ட்விட்டர் பக்கத்தில், இதற்கான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் பகிர்ந்த அவர். இப்போதுதான் என்னால் தூங்க முடியும் என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்திருந்தாா். இதனால் படத்தில் வில்லன், நிஜத்தில் ஹீரோ என்று சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது

More Tamilnadu News


அண்மைய செய்திகள்