பசிச்சிச்சிம்மா.... 4 வயது பையன் செய்த மலைக்க வைக்கும் ஆர்டர்

by SAM ASIR, Nov 26, 2020, 18:42 PM IST

பெற்றோரின் மொபைல்போன்களை எடுத்துப் பிள்ளைகள் விளையாடுவதை பார்ப்பது சாதாரணமாகிவிட்டது. பிள்ளைகள் பெற்றோர் செய்வதை பார்த்து அப்படியே பின்பற்றுவார்கள் என்பது நமக்குத் தெரியும். அம்மா, உணவகங்களுக்கு போன் மூலம் ஆர்டர் செய்வதை பார்த்து பழகியுள்ளான் நான்கு வயது சிறுவன் டாம். ஒருநாள், அவனுக்குப் பசித்துள்ளது. அவன் அம்மாவின் மொபைல் போனை எடுத்து ஆர்டர் செய்துள்ளான். வீட்டுக்கு வந்த உணவு பொருள்களை பார்த்து மலைத்துப் போனார்கள் அவன் தாய் ரைசா ஆண்ட்ரடே.

6 பர்கர், ஃப்ரை, 10 மில்க் ஷேக், 1 கிரேப் ஜூஸ், 2 கெச்அப், 12 சிக்கன் நக்கட்ஸ் 2 பேக், 1 சிப்ஸ் பாக்கெட், 8 தண்ணீர் பாட்டில் இவ்வளவையும் மெக் டொனால்டில் ஆர்டர் செய்துள்ளான் டாம். இந்த சம்பவம் பிரேசிலில் நடந்துள்ளது. மொத்த விலை 400 பிரேசில் ரியால்ஸ் (ரூ.5,500/-) ஆகும். அவன் அம்மா ரைசா இதை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். அவ்வளவையும் சாப்பிட முடியாமல் உறவினர்களுக்கும் அக்கம்பக்கத்தினருக்கும் பகிர்ந்து உண்டுள்ளார்கள்.பெற்றோரின் மொபைல்போன்களை எடுத்துப் பிள்ளைகள் விளையாடுவதை பார்ப்பது சாதாரணமாகிவிட்டது. பிள்ளைகள் பெற்றோர் செய்வதை பார்த்து அப்படியே பின்பற்றுவார்கள் என்பது நமக்குத் தெரியும்.

More World News


அண்மைய செய்திகள்