கடந்த பிப்ரவரி மட்டும் ரூ. 89,264 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளதாக மதிய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய அரசு கடந்த 2017 ஜூலை மாதம் நாடு முழுவதும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.), அமலுக்கு கொண்டுவந்தது. ஜி.எஸ்.டி. அமலான முதல் மாதம் வரி வசூல் ரூ.95 ஆயிரம் கோடி, ஆகஸ்டு மாதத்தில் ரூ.91 ஆயிரம் கோடியாகவும், செப்டம்பர் மாதம் ரூ.92,150 கோடியாகவும், அக்டோபர் மாதம் ரூ.83 ஆயிரம் கோடியாகவும், நவம்பர் மாதம் ரூ.80,808 கோடியாகவும், டிசம்பர் மாதம் ரூ.86,703 கோடியாகவும், ஜனவரி மாதம் ரூ,86,318 கோடியாகவும் இருந்தது.
கடந்த பிப்ரவரி மாத ஜி.எஸ்.டி. வசூல் நிலவரத்தை மத்திய நிதி அமைச்சகம் தற்போது வெளியிட்டுள்ளது. கடந்த மார்ச் 25-ந் தேதி நிலவரப்படி, பிப்ரவரி மாத வசூல், ரூ.89 ஆயிரத்து 264 கோடியாக உள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜி.எஸ்.டி அமலான முதல் மூன்று மாதங்களுக்கு ஏற்றம் இறக்கம் என்ற நிலை மாறி கடந்த 2017 டிசம்பர் மாதம் முதல் ஜி.எஸ்.டி. வசூல் சற்று அதிகரித்தது. மீண்டும் ஜனவரி மாதம் குறைந்தது. இந்நிலையில் கடந்த ஜனவரி மாதத்தைவிட பிப்ரவரி மாதம் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.