பத்திரிகை சுதந்திரத்துக்கு கட்டுப்பாடு விதிப்பதாக மோடி எதிராக நாடு முழுவதும் பத்திர்கையாளர்கள் ஒன்றிணைந்து எழுப்பிய கண்டனக் குரலால் பிரதமர் நேற்று மாலை விதித்த சட்டத்தைத் திரும்பப்பெற்றுள்ளார்.
தேசிய அளவில் பத்திரிகையாளர்கள் மத்திய அரசுக்கு எதிராக பொய்யான செய்திகளைப் பரப்புவதாகவும் அவ்வாறு இனிமேல் செய்திகள் வெளியிட்டால் அந்தச் செய்தியாளர்களின் உரிமை பறிக்கப்பட்டு தண்டனையும் வழங்கப்படும் என நாட்டின் பிரதமர் மோடி நேற்று மாலை புதியதொரு பாரத்தை உருவாக்கும் முயற்சியில் ஒரு சட்டத்தைப் பிறப்பித்தார்.
அரசின் செயல்களை எந்தவொரு சார்பின்மையும் இன்றி விமர்சிக்கும் நாட்டின் தூண்களாகக் கருதப்படுபவர்கள் பத்திரிகையாளர்கள். அத்தகைய பத்திரிகையாளர்கள் பிரதமரின் நாடு விளங்குவதற்காகக் கொண்டுவரப்படும் திட்டங்களையும் செயல்களையும் நலப்பணிகளையும் பொய்யான பரப்புரைகளால் இழுக்கு தேடித்தருகிறார்கள் என பாரதப் பிரதமர் மோடியின் தலைமையிலான அரசு கருதியதாம்.
அதற்காக உடனடியாக நேற்று மாலை பத்திரிகையாளர்களுக்கும் பத்திரிகைச் சுதந்திரத்துக்கும் முட்டுக்கட்டை போடும் விதமாக ஒரு சட்டம் அமல்படுத்தப்பட்டது. இதன் அடிப்படையில் பொய் செய்திகள் வெளியிடும் பத்திரிகைக்கும் பத்திரிகையாளர்களுக்கும் தண்டனை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
ஆனால், பத்திரிகையாளர்கள் தேசிய அளவில் இச்சட்டத்துக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் சட்டம் இயற்றி 24 மணி நேரம் கூட ஆகாத நிலையில் மோடி அவர்களாளே சட்டம் திரும்பப்பெறப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.