டிஜிட்டல் மீடியா தான் வருங்காலம்: சொல்கிறார் பாபி சிம்ஹா

Apr 3, 2018, 13:34 PM IST

குறும்படங்களில் நடித்து பின் வெள்ளித்திரையில் ஜொலிக்கும் நட்சத்திரங்களில் தவிர்க்க முடியாத இடம் பிடித்தவர் நடிகர் பாபி சிம்ஹா. பிட்சா, காதலில் சொதப்புவது எப்படி, சூதுக்கவ்வும், நேரம், ஜிகர்தண்டா என படங்களை தேர்ந்தெடுத்து நடித்துவந்தார்.

ஜிகர்தண்டா படத்திற்கு தேசிய விருது பெற்ற பின் இவரை அனைவரும் கூர்ந்து கவனித்து வந்தனர். இருப்பினும் அதன் பிறகு வெளியான திரைப்படங்கள் அவருக்கு சரியாக கை கொடுக்கவில்லை. தொடர்ந்து, சமீபத்தில் வெளியான திரைப்படம் திருட்டுப்பயலே-2 இவருக்கு சற்று ஆறுதல் அடைந்தார்.

தற்போது மலையாள திரைப்படமான "கம்மார சம்பவம்" திலீப், சித்தார்துடன் பாபி சிம்ஹாவும் நடித்துள்ளார். பாபி சிம்ஹா பேசும் போது "கம்மார சம்பவம்" ட்ரைலருக்கு கிடைத்த அபரிமிதமான வரவேற்பு மகிழ்ச்சி அளிக்கிறது. என் கதாபாத்திரத்தை பற்றி நிறைய கூற முடியாது. ஆனால் என்னுடைய சினிமா அனுபவத்தில், இதுவரை நான் பார்க்காத ஒரு கதாபாத்திரமாக நிச்சயம் இருக்கும்" என்றார்.

மேலும், "எனது நடிப்பில் `வல்லவனுக்கு வல்லவன்' படம் கோடை விடுமுறையில் வெளியாகிறது. மேலும் அடுத்த புதிய படம் பற்றிய அறிவிப்பு ஏப்ரல் 14-ஆம் தேதி (தமிழ் புத்தாண்டு) வெளியாக இருக்கிறது.விக்ரமுடன் இணைந்து `சாமி-2' படத்திலும் நடிக்கிறேன்.

சினிமாவை தவிர்த்து வெப் சீரீஸிலும் நடித்து வருகிறேன். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் வெப் சீரிஸில், தன்னுடன் காயத்ரி ஷங்கர், பார்வதி நாயர் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

சில நேரங்களில் திரையரங்கில் படத்தை பார்க்க முடியாதபோது, டிஜிட்டல் பிளாட்ஃபார்மில் சட்டத்திற்குட்பட்டு பார்க்க முடிகிறது. சினிமா டிக்கெட், பாப்கார்ன் விலையை கணக்கில் கொண்டால், நிச்சயமாக வெப் சீரீஸ் ரசிகர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக இருக்கும். டிஜிட்டல் பிளாட்ஃபார்ம் தான் வருங்காலமாக இருக்கக் போகிறது" என்கிறார் பாபி சிம்ஹா.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading டிஜிட்டல் மீடியா தான் வருங்காலம்: சொல்கிறார் பாபி சிம்ஹா Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை