அரியர் தேர்வு வழக்கின் விசாரணை சில நாட்களுக்கு முன்நடந்தது. அப்போது, யுஜிசி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், `பல்கலைக்கழகத்தின் அரியர் தேர்வுகளை ரத்து செய்ய முடியாது என்றும், தேர்வுகளை கட்டாயமாக எழுதியே ஆக வேண்டும்' என்று கூறப்பட்டதது. தமிழக அரசு சார்பில் இந்த வழக்கில் பதில் மனுதாக்கல் செய்யப்பட்டது. ``தமிழக அரசு வெளியிட்ட அரியர் தேர்வு அறிவிப்பில் எந்த விதிமீறலும் இல்லை. யுஜிசியின் விதிகளை மீறி அரியர் தேர்வு விவகாரத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. அரியர் தேர்வை ரத்து செய்ய பல்கலைக்கழகங்களுக்கு முழு அதிகாரம் இருக்கிறது. அந்த அடிப்படையிலேயே அறிவிப்பு வெளியிடப்பட்டது" என்று வாதிட்டது தமிழக அரசு.
இதற்கிடையே, இன்றைய வழக்கு விசாரணையின்போது, பல்கலைக்கழகங்கள் வெளியிட்ட அரியர் தேர்வு முடிவுகளுக்கு இடைக்கால தடை விதித்து அதிரடியாக தீர்ப்பளித்தது சென்னை உயர்நீதிமன்றம். மேலும் அரியர் தேர்வு விவகாரத்தில் தேர்வை ரத்துசெய்ய பல்கலைக்கழகங்களை அரசாணை மூலம் எப்படி கட்டாயப்படுத்த முடியும். எனவே நேரடியாகவோ, ஆன்லைனிலோ தேர்வு நடத்தாமல் தேர்ச்சி என பல்கலைக் கழகங்கள் அறிவிக்கக்கூடாது எனவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதற்கிடைய , வழக்கின் விசாரணையை சிலர் யூடியூப்பில் நேரலை செய்தனர். இந்த விவகாரம் நீதிபதிகளின் கவனத்துக்கு கொண்டுசெல்லப்பட்டது.