திருநள்ளாறில் பந்தக்கால் முகூர்த்தத்தோடு தொடங்கியது சனிப்பெயர்ச்சி விழா

Advertisement

டிசம்பர் 27 ம் தேதி அதிகாலை 5.22 மணிக்கு தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு சனிபகவான் பெயர்ச்சியடைகிறார். காரைக்கால் அருகேயுள்ள திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா நடைபெற உள்ளதையொட்டி பந்தல்கால் முகூர்த்தம் விமரிசையாக நடைபெற்றது. காரைக்கால் மாவட்டம் திருநள்ளாற்றில் ஸ்ரீ பிரணாம்பிகை சமேத ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோவிலில் ஸ்ரீ சனீஸ்வரபகவான் தனி சந்ததி கொண்டு அனுக்கிரஹ மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சனிப்பெயர்ச்சி இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகிறது. அப்போது இக்கோவிலில் திரளான பக்தர்கள் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வந்து கலந்து கொண்டு தரிசனம் செய்வர். வரும் டிசம்பர் 27ம் தேதி அதிகாலை 5.22 மணிக்கு தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு சனிபகவான் பெயர்ச்சியடைகிறார்.

அப்போது இக்கோவிலில் சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்து சிறப்பு ஆராதனையும் செய்யப்படும். சனிப்பெயர்ச்சி நாள் முதல் தொடர்ந்து 2 மாதங்கள் சனிக்கிழமைகளில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்வார்கள். சனிப்பெயர்ச்சி விழா தொடங்குவதற்கான பூர்வாங்கப் பணிகளின் தொடக்கமாக பந்தல்கால் முகூர்த்தம் கோவில் வளாகத்தில் நடைபெற்றது. சிவாசார்யர்கள் பந்தல்காலுக்கு அபிஷேக, ஆராதனைகளை செய்து வளாகத்தில் பந்தல்கால் நடப்பட்டது. இந்நிகழ்வில் புதுச்சேரி வேளாண்துறை அமைச்சர் கமலக்கண்ணன், மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் சர்மா, துணை ஆட்சியரும், கோவில் நிர்வாக அதிகாரியுமான ஆதர்ஷ், தருமபுர ஆதின கட்டளை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்ட பல பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கமலக்கண்ணன், வழக்கமாக சனிப்பெயர்ச்சி விழாவுக்கு முன்பாக செய்யக்கூடிய பணிகள் போன்று இந்தாண்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. தற்போது கொரோனா தொற்றுள்ள காலமாக இருப்பதால், விதிகளுக்கு உட்பட்டு சனிப்பெயர்ச்சி நாளில் தரிசனத்திற்கான வசதிகள் செய்யப்படும். சிறப்பு ரயில், பேருந்து போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்யப்படும். நளன் தீர்த்தக் குளத்தில் பக்தர்கள் நீராடவும், பக்தர்களுக்கான குடிநீர், உணவு, கழிப்பறை வசதிகள் உள்ளிட்டவையும் சிறந்த முறையில் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன என்றார்.

Advertisement
மேலும் செய்திகள்
actress-mahalakshmi-s-husband-ravinder-is-in-trouble-again
சிக்கிய பென் டிரைவ்,ஆவணங்கள்... நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தருக்கு மீண்டும் சிக்கல்
he-broke-his-promise-so-we-broke-up-ramarajan-open-talk-on-nalini
சத்தியம் செய்ததை மீறினார்... அதனால் பிரிந்தோம்- நளினி குறித்து ராமராஜன் ஓபன் டாக்
hospital-built-by-napoleon-grandfather-greeted-the-boy
நெப்போலியன் கட்டிய மருத்துவமனை... நீ நடப்பாய் சிறுவனை வாழ்த்திய பெரியதம்பி தாத்தா.... வாக்கு பலித்த அதிசயம்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!

READ MORE ABOUT :

/body>