கொரோனா நோயாளிகள் குடியிருக்கும் வீட்டுக் கதவில் அவர்களைப்பற்றிய விவரங்களை குறிப்பிட்டு போஸ்டர் ஒட்ட மாநில அரசுகளுக்கு உத்தரவிடவில்லை என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று துவங்கிய காலத்தில் யாருக்காவது கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் அவர்களது வீட்டில் அவர்களைப் பற்றிய விவரங்கலுடன் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையின் போது மத்திய அரசு அவ்வாறு வீடுகளில் நோட்டீஸ் ஒட்ட மாநில அரசுகளுக்கு நாங்கள் உத்தரவிடவில்லை.
மேலும், பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் இது போன்ற போஸ்டர் ஒட்டப்படுவதை தவிர்க்க வேண்டும் என்றும், இது தொடர்பான உத்தரவுகளை மாநில அரசுகள் பிறப்பிக்க முடியும் என்றும் மத்திய அரசு ஏற்கெனவே தெளிவுப்படத்தி உள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக அரசுகள் இத்தகைய எச்சரிக்கை நோட்டீஸ்களை ஒட்டினாலும் பாதிக்கப்பட்டவர்களை அக்கம்பக்கத்தினர் தீண்டாமை கண்ணோட்டத்தில் நடத்த தொடங்கி விடுவார்கள் என்று தெரிவித்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை வரும் வியாழக்கிழமைக்கு ஒத்தி வைத்தனர்.