வன்னியர் சங்கத்தை தடை செய்ய கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு!

by Loganathan, Dec 2, 2020, 18:17 PM IST

வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு கேட்டு பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் மற்றும் இளைஞரணி தலைவர் திரு.அன்புமணி இராமதாஸ் தலைமையில் நேற்று முதல் சென்னையில் போராட்டம் வெடித்துள்ளது. பாமக நடத்­திய போராட்டத்­தில் பொது­மக்­க­ளுக்கு இடை­யூறு மற்­றும் பொது சொத்­துக்­க­ளுக்கு சேதம் ஏற்­ப­டுத்­திய வன்­னி­யர்சங்­கத்தை தடை செய்­யக்கோரி சென்னை உயர்நீதி­ மன்­றத்­தில் பத்­தி­ரி­கை­யாளர் வாராகி முறை­யீடு செய்தார். கல்வி, வேலைவாய்ப்­பு­க­ளில் வன்­னி­யர்­க­ளுக்கு 20 சத­வீத இட ஒதுக்­கீடு வழங்­கக் கோரி, வன்­னி­யர் சங்­கம் சார்­பில் நேற்று கோட்டையை நோக்­கிய பேரணி நடந்­தது.

இதில், பங்­கேற்­ற­வர்­கள்,சாலை மறி­யல், ரெயில் மறி­ய­லில் ஈடு­பட்­ட­னர். பொது
சொத்­துக்­கள் மீது கல்­லெறிந்து சேதப்­ப­டுத்­தி­னர். இதனால், பொது­மக்­கள் பாதிக்கப்­பட்­ட னர்.இந்­நி­லை­யில், பொது­மக்க­ளுக்கு இடை­யூறு ஏற்­ப­டுத்தி­யது, பொது சொத்­துக்­களுக்கு சேதப்­ப­டுத்­தி­ய­வர்­கள் மீது நட­வ­டிக்கை கோரி, வழக்கு தொடர அனு­மதி கேட்டு, பத்­தி­ரிக்­கை­யாளர் வாராகி, சென்னை உயர்நீதி­மன்­றத்­தில் நீதி­ப­தி­கள் எம்.சத்­ய­நாரா­யணன், ஆர்.ஹேம­லதா அமர்­வில் முறையிட்­டார்.

அத்­து­டன் மனுவை அவ­சர வழக்­காக விசா­ரிக்க வேண்­டும் என்று கேட்­டு கொண்­டார்.
அதற்கு நீதி­ப­தி­கள், மனு­வாக தாக்­கல் செய்­தால், எந்த அமர்வு விசா­ரிக்க வேண்­டும்
என்­பதை பதி­வுத்­துறை முடி­வெ­டுக்­கும் என்று கூறி­னர்.போராட்­டத்தை நடத்­திய
வன்­னி­யர் சங்­கத்தை தடை செய்­யக்கோ­ரி­யும், போராட்டத்­திற்கு அழைப்பு விடுத்த
டாக்­டர் ராம­தாஸ், அன்பு­மணி ராம­தாஸ் ஆகி­யோர் மீது வழக்­குப்பதிவு செய்யக்கோ­ரி­யும் மனு தாக்­கல் செய்ய இருப்­பதாக வாராகி தக­வல் தெரி­வித்­தார்.

You'r reading வன்னியர் சங்கத்தை தடை செய்ய கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு! Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை