Indane கேஸ் சிலிண்டர் இனி வாட்ஸ்ஆப் மூலம் பதிவு செய்யலாம்!

by Loganathan, Dec 2, 2020, 17:02 PM IST

மத்திய அரசின் கடுமையான முயறிச்சியின் மூலம் இந்திய நாட்டிலுள்ள பெரும்பான்மையான வெகுஜன, கிராமப்புற பெண்கள் விறகு அடுப்பிற்கு சமாதி கட்டிவிட்டு, கேஸ் அடுப்பிற்கு மாறிவிட்டனர். இதில் முக்கிய பங்காற்றியது மத்திய அரசின் உஜ்வாலா திட்டம். இந்த கேஸ் சிலிண்டர்களை Indane, Bharathgas மற்றும் HP போன்ற நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. கிராமப்புற பெண்கள் கேஸ் அடுப்பிற்கு மாறிவிட்டாலும், சிலிண்டர் தீர்ந்த பின்பு அதனை திரும்ப பெற குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு தெரிவிக்க வேண்டும். பின்னர் அந்நிறுவனத்தின் விநியோகிஸ்தர் தேவையான பயனாளிகளின் அருகில் உள்ள கிடங்கில் இருந்து விநியோகிப்பர்.

ஆனால் பதிவு செய்யும் முறை இன்னும் பல பயனாளிகளுக்கு கசப்பான ஒன்றாகவே உள்ளது. அடிப்படை கல்வி பெறாத பயனாளிகளால் இப்பதிவினை செய்ய முடியவில்லை இதனால் அவர்கள் மற்றவர்களின் உதவியை நாட வேண்டிய சூழல் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு நிறுவனங்களும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அந்த வகையில் Indane நிறுவனம் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு, சிலிண்டர் பதிவு செய்ய பல முறைகளை உட்புகுத்தி உள்ளது.

பதிவு செய்யும் வழிமுறைகள்:

1. சம்பந்தப்பட்ட விநியோகிஸ்தரிடம் தொலைபேசியின் மூலம், பயனாளர் எண்ணை தெரிவித்து பதிவு செய்வது.

2. பயனாளரின் பதிவு செய்யப்பட்ட எண்ணில் இருந்து, குறிப்பிட்ட நிறுவனத்தின் தொலைபேசி எண்ணிற்கு அழைப்பு விடுத்து பதிவு செய்தல்.

3.https://iocl.com/Products/Indanegas.aspx என்ற இணையதளத்தில் சென்று பதிவு செய்தல்

4. நிறுவனத்தின் வாட்ஸ் ஆப் எண்ணிற்கு செய்தி அனுப்பி பதிவு செய்தல்.

5. நிறுவனத்தின் பிரத்யேகமான ஆஃப் மூலம் பதிவு செய்தல்.

மேற்கண்ட முறைகளின் மூலம் Indane நிறுவன பயனாளர்கள் தங்களின் சிலிண்டரை புதுப்பிக்க பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும் Indane நிறுவன வாடிக்கையாளர்கள் 7718955555 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு சிலிண்டர்களை பதிவு செய்யலாம். மேலும் வாட்ஸ்ஆப் மூலம் பதிவு செய்ய மேலே குறிப்பிட்ட எண்ணிற்கு, பதிவு செய்த தொலைபேசி எண்ணில் இருந்து "REFILL" என்று குறுஞ்செய்தி அனுப்புவதன் மூலம் பதிவு செய்யலாம்.

வாட்ஸ்ஆப் அல்லது குறுஞ்செய்தி மூலம் பதிவு செய்யப்படும் போது வாடிக்கையாளர்களுக்கு DAC ( Delivery Authentication Code) எனும் பாதுகாப்பு குறியீட்டு எண் அனுப்பபடும். பயனாளர் சிலிண்டரை பெறும் போது இந்த குறியீட்டு எண்ணை காண்பித்தால் மட்டுமே சிலிண்டர் வழங்கப்படும். தொலைபேசி எண் பதிவு செய்யாத வாடிக்கையாளர்கள் அருகில் உள்ள விநியோக மையத்தை தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம்.

You'r reading Indane கேஸ் சிலிண்டர் இனி வாட்ஸ்ஆப் மூலம் பதிவு செய்யலாம்! Originally posted on The Subeditor Tamil

More Technology News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை