தொண்டை மண்டல ஆதீன 232வது மடாதிபதி ஞானப்பிரகாச (87) தேசிக சுவாமிகள் இன்று காலமானார். இதைத்தொடர்ந்து மடத்தில் தங்கி உள்ள நித்தியானந்தாவின் சீடர்களை வெளியேற்ற நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர். காஞ்சிபுரத்தில் 500 ஆண்டுகள் மிகப்பழமையான தொண்டைமண்டல ஆதீனத்த்தின் 232வது மடாதிபதி யான ஞானப்பிரகாசம் (87) தேசிகர் சுவாமியின் உடல்நலக்குறைவால் சென்னை அருகே தனியார் மருத்துவமனையில் காலமானார். தொண்டை மண்டல ஆதீனம் ஞானபிரகாச மடம் காஞ்சிபுரம், பரமசிவன் தெருவில் அமைந்துள்ளது. இந்த மடத்தின் 232-வது பட்டம் மடாதிபதியாக ஞானப்பிரகாச தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் இருந்து வந்தார்.
இவர் கடந்த 2008-ம் ஆண்டு முதல் ஆதீனமாக பொறுப்பேற்று செயல்பட்டு வந்தார். இந்த மடத்துக்கு சென்னை, காஞ்சிபுரம், திருநெல்வேலி, மதுரை உட்பட தமிழகம் முழுவதும் சுமார் ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பிலான சொத்துக்கள் உள்ளது. இந்த நிலையில் இந்த மடத்திற்கு கடந்த 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் நித்யானந்தா சீடர்கள் என்று சொல்லிக் கொண்டு ஒரு ஆணும், பெண்ணும் வந்தனர். மடாதிபதிக்கு பணிவிடை யும், சேவை செய்ய வந்ததாக கூறி மடத்திலேயே தங்கி விட்டனர்.இதன் பிறகு மடத்தில் பல்வேறு பிரச்னைகள் உருவானது. ஒருகட்டத்தில் மடாதிபதி கடத்தப்பட்டு சில நாட்கள் கழித்து மீட்கப்பட்டார். 2000 கோடி ரூபாய் சொத்துக்கு ஆகவே மடாதிபதி கடத்தப்பட்டார் என்று தகவல்கள் வெளியாகின.
பின்னர் சில மாதங்கள் கழித்து மடாதிபதி மீண்டும் மடத்திற்கு வந்தார். இதனிடையே கடந்த சில நாட்களாக மடாதிபதிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு சென்னை அருகே உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது உடல் இரவு நாளை தொண்டை மண்டல ஆதீனத்தில் அடக்கம் செய்யப்பட உள்ளது. இந்த நிலையில் இனி ஆதினத்தில் நித்தியாநந்தா சீடர்களுக்கு அனுமதியில்லை தற்போது உள்ள சீடர்களை வெளியேற்ற மடத்தின் நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர். ஒருவேளை இதே பிரச்சினை ஏற்படலாம் என்பதால் போலீசார் பாதுகாப்பு கேட்கப்பட்டுள்ளதாக ஆதீன ஆலோசனை குழு உறுப்பினர் குப்புசாமி தெரிவித்துள்ளார்.