சீமான் பிரபாகரன் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் கிராஃபிக்ஸ் - வைகோ கொந்தளிப்பு

மொத்தம் 8 நிமிடம்தான் இவரைப் பார்க்க பிரபாகரன் அனுமதித்தார். புகைப்படம் எடுக்க அனுமதிக்கவில்லை. புகைப்படம் கிராபிக்ஸில் செய்து கொண்டார்கள் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

Apr 4, 2018, 22:43 PM IST

மொத்தம் 8 நிமிடம்தான் இவரைப் பார்க்க பிரபாகரன் அனுமதித்தார். புகைப்படம் எடுக்க அனுமதிக்கவில்லை. புகைப்படம் கிராபிக்ஸில் செய்து கொண்டார்கள் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

ஏப்ரல் 3-ம் தேதி மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகேயுள்ள பெருங்காமநல்லூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் வைகோ கலந்துகொண்டு பேசினார். வைகோ பேசத் தொடங்கிய நேரத்தில் நாம் தமிழர் கட்சியினர் அந்தக் கட்சியின் தென் மண்டல செயலாளர் வெற்றிசெல்வன் தலைமையில் கோஷமிட்டபடி அங்கு வந்தனர். மேடையிலேயே சீமானை பெயரைக் குறிப்பிடாமல் தாக்கிப் பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, “8 ஆண்டுகளாக நான் பொறுமையோடு இருக்கிறேன். என்னை தமிழன் அல்ல என்றும், தெலுங்கன் என்றும் சீமான் பேசியதோடு அல்லாமல், ஈரோடு ராமசாமி நாயக்கப் பயல் என்று எல்லா மேடைகளிலும் பேசினார். இந்த அண்ணாத்துரை, நாட்டை கெடுத்துவிட்டார் என தொடக்க காலத்தில் பேசினார். நான் சகித்துக்கொண்டு இருந்தேன்.

விடுதலைப் புலிகளின் சின்னத்தை, பிரபாகரன் உயிரோடு இல்லைன்னு கருதிக்கொண்டு புலிகளுடைய கொடியை தனது சின்னமாக்கி, பிரபாகரனுடன் பல நாள் இருந்ததாகவும், வேட்டைக்கு போனதாகவும், ஆமைக்கறி தின்னதாகவும் கோயபல்ஸ்கூட சொல்ல முடியாத பொய்யை சொன்னார்.

மொத்தம் 8 நிமிடம்தான் இவரைப் பார்க்க பிரபாகரன் அனுமதித்தார். புகைப்படம் எடுக்க அனுமதிக்கவில்லை. புகைப்படம் கிராபிக்ஸில் பண்ணிகிட்டாங்க. புலிகள் சீருடை அணிந்து உங்களுடன் போட்டோ எடுத்துக் கொள்ளலாமா? என கேட்டபோது, ‘அது உங்களுக்கு அனுமதி கிடையாது’ என்று கூறிவிட்டார்கள்.

நான் புலிகள் சீருடை அணிந்து, அந்தக் காட்டில் பிரபாகரனோடு சென்று ஒரு மாதம் இருந்தவன்! உண்மையில் ஆயுதப் பயிற்சியை பிரபாகரனிடம் பெற்றவன்! மயிரிழையில் உயிர் பிழைத்து வந்தவன்! ‘அண்ணன் வை.கோபால்சாமியின் தியாகத்தைப் பார்க்கும்போது நான் நூறு முறை இறக்கலாம்’ என கலைஞருக்கு எழுதிய கடிதத்தில் எழுதியிருந்தார். அந்தக் கடிதத்தை 27 வருஷம் கழிச்சு திருச்சி மாநாட்டில் வெளியிட்டேன். நாலு பக்கம் பிரபாகரன் கையெழுத்து போட்டு எழுதிய கடிதம். நான் விளம்பரப்படுத்தி கொண்டதில்லை.

உலக நாடுகள் முழுவதும் தன்னை விடுதலைப் புலிகளின் பிரதிநிதி என சொல்லி கோடிக்கணக்கில் வசூல் செய்கிறார் என அந்த அமைப்பில் பலருக்கு தெரிஞ்சி, அய்யநாதன் உள்பட பலர் வெளியில வந்துட்டாங்க. நான் ரொம்ப நாளா இதைப் பற்றி வாய் திறக்கவில்லை.

ஸ்டெர்லைட் முதலாளி என்னை சந்திக்க வேண்டுமென்று சொல்லி அட்டர்னி ஜெனரல் என்னிடம் வந்து, ‘பத்து நிமிஷம் உங்ககிட்ட அப்பாய்ன்மெண்ட் கேட்கிறாரு. எங்க வரச் சொன்னாலும் வருவார்’ என்று கூறினார்.

நான் ‘அவரை பார்க்க மாட்டேன். வேதாந்தா குழுமத்தின் அனில் அகர்வால் எங்களை அழிக்கப் பார்க்கிறார். நான் நீதிமன்றத்தில் சந்திப்பேன்’ என்று சொன்னேன். இன்னைக்கு என்னுடைய வழக்குதான் நீதிமன்றத்தில் மனுவாக இருக்கிறது. தமிழ்நாடு ரிட் நிக்குது. அரசு நடத்தாது. ஆனால் என்னை, ‘ஸ்டெர்லைட் டீல் முடிஞ்சிடுச்சு. இப்போ நியூட்ரினோவுக்கு கிளம்பிட்டான்’ என்று மீம்ஸ் போடுகிறார்கள்.

இதையும் நான் சகிச்சுகிட்டேன். வாழ்நாள் முழுவதும் பழிகளை சுமந்தே பழக்கப்பட்டவன் நான். இன்னைக்கு நீங்க கேட்கிறதுனால் சொல்கிறேன். நான் வெளியில வரும்போது கோஷம் போட்டுகிட்டு இருந்தாங்க. நான் கண்ணசைத்தால் தமிழ்நாட்டுல உயிரைக் கொடுக்க ஒரு லட்சம் பேர் இருக்கிறார்கள். என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்” என்று தெரிவித்தார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading சீமான் பிரபாகரன் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் கிராஃபிக்ஸ் - வைகோ கொந்தளிப்பு Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை