ஆ... ஊ...ன்னா கடையடைப்பு... வாட்ஸ்அப்பில் வலம் வரும் “சிறு வியாபாரியின் குமுறல் கடிதம்”

விக்கிரமராஜா:- 3'ம் தேதி கடையடைப்பு. ஸ்டாலின்:- 5'ம் தேதி, கடையடைப்பு. வெள்ளையன்:- 11"ம் தேதி கடையடைப்பு. அடுத்தது மே'5ம் தேதி வணிகர் தினம்:- நன்கொடை வசூல் மற்றும் கடையடைப்பு. காவிரி விவகாரத்தில் இன்னும் பல லட்டர் பேடு அமைப்புகள் கடை அடைப்பு.

விக்ரமராஜா,வெள்ளையன்,ஸ்டாலின் ஆகியோருக்கு ஒரு சிறு வியாபாரியின் கடிதம்... "முதலில் ஒன்றை தெளிவுபடுத்த விரும்கிறேன். வியாபாரிகளின் நிலைப்பாடு காவிரி மேலாண்மை வாரியம் அமையவேண்டும் விவசாயிகள் வாழ்வு செழிக்கவேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.

விவாசாயிகள் நல்லா இருந்தால்தான் நாங்கள் வியாபாரம் நல்ல முறையில் செய்ய முடியும். விளைச்சல் அதிகமானால் பணபுழக்கம் அதிகமாகும், எனவே விசாயிகள் பிரச்சனைக்கு வியாபார பெருமக்களின் முழு ஆதரவு உண்டு. ஆனால் இங்கு நடப்பது என்ன? "அரசியல்.... அரசியல்.... அரசியல்"

விக்ரமராஜா அவர்களுக்கும், வெள்ளையன் அவர்களுக்கும் தற்போதைய வியாபாரிகளின் நிலை நன்றாக தெரியும். பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி போன்ற காரணமாக வியாபாரம் குறைந்துள்ளது. ஒவ்வொரு வியாபாரியும் கடை வாடகை கட்டவும், பணியாளர் சம்பளத்திற்கும், இதர கடை செலவுகளுக்கும், சிரமபட்டுக் கொண்டிருக்கிறான். இந்த நிலையில் ஆ...ஊ...ன்னா கடையடைப்பு நடத்த அழைப்பு விடுத்து விடுகிறீர்கள், அதுவும் வெவ்வேறு தேதிகளில். காரணம் என்னுடையது பெரிய சங்கமா? உன்னுடையது பெரிய சங்கமா? என்ற ஈகோவால் இந்த தனித்தனி அறிவிப்புகள். நல்லா இருக்கு நீங்க வியாபாரிகளை காக்கும் லட்சணம்.

அப்புறம் எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் அவர்கள்... நீங்க ஒரு தேதில கடையடைப்பு செய்ய சொல்றீங்க. அப்போதானே நீங்க அரசியல் செய்ய முடியும், அதற்கு பலிகடா வியாபாரிகள்...

சரிய்யா... நாங்க கடைய அடச்சுட்டு வீட்ல படுத்துக்குறோம். அன்றைய வருமானம் போச்சு, வயித்துல ஈரத்துணிய போட்டுக்குறோம். நீங்க பதிலுக்கு ஒண்ணு செய்யணும், முடியுமா..? உங்க கட்சி சார்பா ஒரு டிவி வச்சு நடத்துறீங்களே, அதுல கடையப்பு நடக்குற அன்னைக்கு மட்டும் விளம்பரமே இல்லாமல் ஒளிபரப்பு செய்வீங்களா?? செய்ய மாட்டீங்க... காரணம் வருமானம் போய்டும். நாங்கதானே இளிச்சவாயர்கள். உங்களுக்கு வந்தா ரத்தம் எங்களுக்கு வந்தா தக்காளி சட்னி.

யப்பா புண்ணியவான்களே வியாபாரிகளை பிழைக்க விடுங்க.
இப்படிக்கு,
ஒரு அப்பாவி
சிறு வியாபாரி.”

 - thesubeditor.com

Advertisement
மேலும் செய்திகள்
actress-mahalakshmi-s-husband-ravinder-is-in-trouble-again
சிக்கிய பென் டிரைவ்,ஆவணங்கள்... நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தருக்கு மீண்டும் சிக்கல்
he-broke-his-promise-so-we-broke-up-ramarajan-open-talk-on-nalini
சத்தியம் செய்ததை மீறினார்... அதனால் பிரிந்தோம்- நளினி குறித்து ராமராஜன் ஓபன் டாக்
hospital-built-by-napoleon-grandfather-greeted-the-boy
நெப்போலியன் கட்டிய மருத்துவமனை... நீ நடப்பாய் சிறுவனை வாழ்த்திய பெரியதம்பி தாத்தா.... வாக்கு பலித்த அதிசயம்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!