வாய்ப்பு இருந்தால் ரஜினியுடன் கூட்டணி.. ஓபிஎஸ் போடும் கணக்கு என்ன?!

by Sasitharan, Dec 3, 2020, 18:02 PM IST

இன்று நடிகர் ரஜினி அளித்த பேட்டியில், ஜனவரியில் புதிய கட்சி தொடங்குவேன் என்றும், டிசம்பர் 31ம் தேதியன்று அதற்கான தேதியை அறிவிப்பேன் என்று அறிவித்தார். மேலும் அவர் கூறுகையில், எல்லோருக்கும் தலையெழுத்து இருக்கும். அதே போல, தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாத்த வேண்டிய நேரம் வந்து விட்டது. எல்லோரும் சேர்ந்து மாத்துவோம். இப்ப இல்லேன்னா.. எப்பவும் இல்லே.. என்று தெரிவித்தார். மேலும், தனது கட்சிக்கு மேற்பார்வையாளராக தமிழருவி மணியனையும், தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுன மூர்த்தியையும் அறிவித்து அவர்களை அறிமுகப்படுத்தினார்.

ரஜினியின் அரசியல் எண்ட்ரி தொடர்பாக தற்போது அரசியல் பிரமுகர்களும், சினிமா பிரபலங்களும் கருத்து தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ரஜினிகாந்தின் அறிவிப்பு தொடர்பாக பேசியிருக்கிறார். அதில், ``ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் அவரை வரவேற்கிறோம் என்று தெரிவித்தார்.ரஜினியின் வரவு நல்வரவாகட்டும். மேலும் அரசியலில் எதிர்வரும் காலங்களில் எதுவும் நடக்கலாம். வரும் காலத்தில் சூழ்நிலையை பொறுத்து ரஜினியுடன் கூட்டணி அமைக்கவும் வாய்ப்புள்ளது" என்று கூறியுள்ளார். அதேநேரம் முதல்வர் பழனிசாமியிடம் ரஜினி அரசியல் தொடர்பாக கேட்டபோது, ``ரஜினியின் பேச்சை கேட்கவில்லை. கேட்டுவிட்டு பதில் சொல்கிறேன்" எனக் கூறியுள்ளார்.

You'r reading வாய்ப்பு இருந்தால் ரஜினியுடன் கூட்டணி.. ஓபிஎஸ் போடும் கணக்கு என்ன?! Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை