யாருங்க இந்த அர்ஜுனமூர்த்தி?

Advertisement

இவர் என்னுடன் இருப்பது நான் செய்த பாக்கியம் என்று ரஜினி சொன்ன ஒரே ஒரு வரி மூலம் ஒரே நாளில் ஒட்டுமொத்த தமிழகத்தின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறார் அர்ஜுன மூர்த்தி.அர்ஜுனமூர்த்தி, பாஜகவில் அறிவுசார் பிரிவில் பொறுப்பில் இருந்தவர் மட்டும் அல்ல, சிறந்த தொழில்முனைவரும் ஆவார். வர்த்தகம், உற்பத்தி, பிராண்டிங், டெலிகாம் லைனில் கோலோச்சியவர்

அர்ஜுன மூர்த்தி மற்றும் அவரது மகள் லட்சுமி தீபா இணைந்து 'Yeldi softcom' என்ற நிறுவனத்தை நடத்தி வருகின்றனர். இந்நிறுவனம் நியர் பீல்ட் கம்ப்யூனிகேஷன் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் தொடர்பில்லா முறையில் மொபைல் சாதனம் மூலம் பணப் பரிவர்த்தனை செய்யும் சேவையை வழங்கி வருகிறது. இந்நிறுவனம் வழங்கும் புதுமையான பணப் பரிவர்த்தனை சேவையைப் பல நிறுவனங்கள் பயன்படுத்தி வருகின்றன. தொடர்பில்லா பணப் பரிவர்த்தனை முறை தற்போது பிரபலமாகி வரும் நிலையில், 2016ம் ஆண்டே எல்டி நிறுவனம் இந்த சேவையை அறிமுகம் செய்து விட்டது .

அர்ஜுனமூர்த்தி தொலைத்தொடர்புத் துறையிலும் கால் பதித்து உள்ளவர். ஒரு முறை மொரிஷியஸ் சென்றிருந்த போது ஒரு விடுதியில் சிறிய தொகையைச் செலுத்துவதில் இவருக்கு ஒரு சிக்கல் ஏற்பட்டது. அந்த சிக்கலை உணர்ந்த போதுதான் இதற்கான எளிய தீர்வை வழங்கும் ஐடியா உருவானதாக அவர் சொல்லியிருக்கிறார். இந்த ஐடியா தான் பின்னாளில், யெல்டி சாப்ட்காம் நிறுவனமாக உருவெடுத்திருக்கிறது.அர்ஜுனமூர்த்தி ஒரு தொடர் தொழில் முனைவோராக விளங்கி வருகிறார். 30 ஆண்டுகளுக்கு மேல் இத்துறையில் அனுபவம் உள்ளவர், ஜீனி புட்ஸ், மானுமண்ட் மாஸ்மீடியா உள்ளிட்ட நிறுவனங்களையும் நடத்திக் கொண்டிருக்கிறார்.

தமிழகத்தின் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த அர்ஜுன மூர்த்தி, முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் அரசியல் ஆலோசகராகவும் இருந்தவராம். முரசொலிமாறன் மறைவிற்குப் பின்னர் சிலகாலம் அரசியல் வாடை தவிர்த்து ஒதுங்கி இருந்தவர் சில காலம் கழித்து பாஜகவில் இணைந்து இருக்கிறார் ஆரம்பத்தில் கட்சியின் வர்த்தகப் பிரிவிலும் அதன் பிறகு அறிவுசார் பிரிவின் தலைவராகவும் பொறுப்பு வகித்திருக்கிறார்.

அண்மையில் பாஜக தமிழகத்தில் நடத்திய வேல் யாத்திரையை ஒருங்கிணைப்பதில் முக்கியப் பங்கு வகித்திருக்கிறார். யாத்திரையில் துவக்கி வைத்ததும் இவர்தான். அப்போதெல்லாம் யாரும் யார் இந்த அத்தனை மூர்த்தி என்று கேட்கவில்லை? அவரை கண்டு கொள்ளவும் இல்லை ஆனால் இன்று ஒரே நாளில் இந்த செய்தியின் தலைப்பாகியிருக்கிறார்.

Advertisement
மேலும் செய்திகள்
actress-mahalakshmi-s-husband-ravinder-is-in-trouble-again
சிக்கிய பென் டிரைவ்,ஆவணங்கள்... நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தருக்கு மீண்டும் சிக்கல்
he-broke-his-promise-so-we-broke-up-ramarajan-open-talk-on-nalini
சத்தியம் செய்ததை மீறினார்... அதனால் பிரிந்தோம்- நளினி குறித்து ராமராஜன் ஓபன் டாக்
hospital-built-by-napoleon-grandfather-greeted-the-boy
நெப்போலியன் கட்டிய மருத்துவமனை... நீ நடப்பாய் சிறுவனை வாழ்த்திய பெரியதம்பி தாத்தா.... வாக்கு பலித்த அதிசயம்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!

READ MORE ABOUT :

/body>