காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்ட நடைபெற்று வருகிறது. போராட்டத்திற்கு ஆதரவாக பேருந்து போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இதைதொடர்ந்து, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கட்சியினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், தமிழகம் முழுவதும் போராட்டக் களமாக மாறி உள்ளது.
காவரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில், திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து போராட்டத்தில் பங்கு பெற அழைப்புவிடுத்துள்ளனர். இதனை ஏற்று போக்குவரத்து கழகத்தை சேர்ந்த பெரும்பாலான தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் எதிரொலியாக, சென்னை உள்பட தமிழகம் முழுவதும் காலை முதல் பேருந்துகள் நிறுத்தப்பட்டனர். ஆட்டோக்கள், வேன்கள் ஓட்டுனர் சங்கங்களும், சரக்கு லாரி, மணல் லாரி, டேங்கர் லாரி உரிமையாளர்களும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் லட்சக்கணக்கான லாரிகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
மேலும், முழு அடைப்பு போராட்டத்திற்கு வணிகர் கங்கங்களும் ஆதரவு அறிவித்துள்ளதால் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
மேலும், தமிழகத்தை கண்டித்து கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருவதால், தமிழகத்தில் இருந்து கர்நாடகா செல்லும் பேருந்துகள் ஓசூரில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதைதொடர்ந்து, சென்னை, கோவை, திருச்சி, அரியலூர், தஞ்சை, கும்பக்கோணம், திருநெல்வேலி, கடலூர், சிதம்பரம், திருவண்ணாமலை உள்ளிட்ட இடங்களிலும் பல்வேறு கட்சி, அமைப்புகளை சேர்ந்தவர்கள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு இடங்களிலும் சுமார் 200க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து அப்புறப்படுத்தி வருகிறது.