நோ பாலில் விக்கெட் விழுந்ததை அஃப்ரிடி கொண்டாடுகிறார் - கம்பீர் பதிலடி

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பிரச்சனை இருந்து வருகிறது. இந்நிலையில் காஷ்மீர் விவகாரம் குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் அப்ரிடி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை கூறியுள்ளார்.

Apr 5, 2018, 10:11 AM IST

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பிரச்சனை இருந்து வருகிறது. இந்நிலையில் காஷ்மீர் விவகாரம் குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் அப்ரிடி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை கூறியுள்ளார்.

அதில், "அடக்குமுறை ஆட்சியால் இந்திய அரசு ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள அப்பாவி மக்களை கொன்று வருகிறது. அப்பாவி மக்கள் கொல்லப்படுவதற்கு எதிராக குரல் கொடுக்க ஐநா சபை போன்ற தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்புகள் எங்கே போய்விட்டன?” என கூறியிருந்தார்.

அப்ரிடியின் ட்விட்டர் கருத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் பதிலுக்கு டுவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை கூறியுள்ளார்.

கம்பீர் தனது டுவிட்டர் பக்கத்தில், “அப்ரிடியின் டுவிட்டிற்கு நான் பதிலளிக்க வேண்டும் என ஊடகங்கள் என்னை கேட்கின்றன. UN என்றால் ‘‘Under Ninteen’’ என்று அர்த்தம் கொள்ளும் அப்ரிடியின் கருத்திற்கு நாம் சொல்வதற்கு என்ன இருக்கிறது?. அப்ரிடி தனது தவறான டிக்சனெரியில் ஆங்கில அர்த்தம் கண்டுபிடித்து வருகிறார். அப்ரிடியின் கருத்து நோ-பால் பந்தில் விக்கெட் விழுவதை கொண்டாடுவது போன்றது. மீடியாக்கள் இதுபற்றி கவலை கொள்ள வேண்டாம்” என்று கூறியுள்ளார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading நோ பாலில் விக்கெட் விழுந்ததை அஃப்ரிடி கொண்டாடுகிறார் - கம்பீர் பதிலடி Originally posted on The Subeditor Tamil

More Sports News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை