ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைத்தண்டனை அனுபவித்துவரும் முருகன் மீது சிறை அதிகாரிகளைப் பணி செய்ய விடாமல் தடுத்ததாக 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.சிறைக்காவலர்கள் பணி செய்ய விடாமல் தடுத்தல் ஆபாசமாகத் திட்டுதல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் அவர் மீது பாகாயம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் உள்ள தனது உறவினர்களிடம் வீடியோ கால் பேச அனுமதிக்கக் கோரியும் புழல் சிறைக்கு மாற்றம் செய்யக்கோரியும் முருகன் கடந்த 25வது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். அவரது விடுதலையைத் தாமதப்படுத்த வேண்டும் என்பதற்காகவே தமிழக அரசு முருகன் மீது தொடர்ந்து பல்வேறு வழக்குகளைப் பதிவு செய்து வருவதாக முருகனின் வழக்கறிஞர் புகழேந்தி தகவல்.