திருவாரூர் மாவட்ட மாசு கட்டுப்பாடு வாரியத்தின் பொறியாளராக பணியாற்றி வருபவர் தன்ராஜ். இவர் தொழிற்சாலைகளுக்கு துறைரீதியான அனுமதி வழங்குவதற்காக பெருந்தொகையை லஞ்சம் கேட்பதாக அரசுக்கு புகார்கள் வந்தது.இந்த நிலையில் திருவாரூரைச் சேர்ந்த அரிசி ஆலை உரிமையாளர் ஒருவர் சுற்றுச்சூழல் உரிமத்தை புதுப்பிப்பதற்காக நாகை, திருவாரூர் மாவட்ட சுற்றுச்சூழல் அலுவலகத்தில் விண்ணப்பம் செய்திருந்தார்.
ஆனால் அவருக்கு உரிமம் புதுப்பித்து கொடுக்கப்படவில்லை. மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளரான தன்ராஜ் உரிமத்தைப் புதுப்பித்துத் தர 40 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத ஆலை உரிமையாளர், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை அலுவலகத்தில் புகார் செய்தார் இதையடுத்து தன்ராஜ் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் தன்ராஜிடம் பணத்தைக் கொடுக்கவைத்து, கையும் களவுமாக கைது செய்தனர்.
தன்ராஜின் வீடு சென்னை அருகே உள்ள ஊரப்பாக்கத்தில் அமைந்துள்ளது. அந்த வீட்டிலும் ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது அவர் பதுக்கி வைத்திருந்த 62 லட்சம் ரூபாயை அவர்கள் பறிமுதல் செய்தனர் கட்டுக்கட்டாக மலைபோல் குவித்து வைக்கப்பட்டிருந்த பணத்தைக் கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர் அப்போது அவர் பதுக்கி வைத்திருந்த 59 லட்சம் ரூபாயை அவர்கள் பறிமுதல் செய்தனர் கட்டுக்கட்டாக மலை போல் குவித்து வைக்கப்பட்டிருந்த பணத்தைக் கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இது தவிர நாகப்பட்டினத்தில் தன்ராஜ் தங்கியிருந்த விடுதி ஒன்றின் அறையில் சோதனையிட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையிட்டு 3 லட்சத்து 14 ஆயிரம் ரூபாயைப் பறிமுதல் செய்தனர். இந்த சோதனையில் சில முக்கிய ஆவணங்களும் ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சில முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.