தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் காலியாக உள்ள 10906 இரண்டாம் நிலை காவலருக்கான பணியிடங்களுக்கான நிரப்பும் பொருட்டு அறிவிப்பாணையைக் கடந்த செப்டம்பர் மாதம் வெளியிட்டது. இதற்கான எழுத்துத் தேர்வு நாளை தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளது. எனவே தேர்வு எழுதும் விண்ணப்பதாரர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பளர் அவர்களின் வழிமுறைகள் வெளியிட்டுள்ளது.
இரண்டாம் நிலைக்காவலர், சிறைக்காவலர், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளுக்கான விண்ணப்பதாரர்களுக்கு வருகிற 13.12.2020 ஞாயிற்றுக்கிழமை தேர்வு மையங்களில் விண்ணப்பதாரர்களுக்குத் தேர்வு நடைபெற உள்ளது.
தேர்வு எழுதும் விண்ணப்பதாரர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பளர் அவர்களின் அறிவிப்பு:
விண்ணப்பதாரர்கள் தேர்வுக்குக் காலை 08.00 மணி முதல் தேர்வு மையத்திற்கு வரலாம், வரும்பொழுது
1.அழைப்புக் கடிதம்(Call Letter)
2.அடையாள அட்டை(ID Proof)
3.பரிட்சை அட்டை (Writing Pad)
4.கருப்பு அல்லது நீல நிற பந்து முனைப் பேனா (Ball point Pen)
5.அனைவரும் முகக்கவசம் கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் தேர்வு மையத்திற்குள் செல்போன், கால்குலேட்டர், எலெக்ட்ரானிக் வாட்ச் மற்றும் எலெக்ட்ரானிக் பொருட்கள் கொண்டுவர அனுமதியில்லை.
11.00 மணிக்கு மேல் வரும் விண்ணப்பதாரர்களுக்குத் தேர்வு எழுத அனுமதி கிடையாது என்பதை காவல்துறை சார்பாகத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இரண்டாம் நிலை காவலர்களுக்கான தேர்வு எழுதும் தேர்வர்களுக்கான நுழைவுச்சீட்டை ( Hall Ticket) பெற இந்த இணைப்பைச் சொடுக்கவும்.