காட்பாடி ஒன்றியத்துக்குட்பட்ட குகையநல்லூர், ஏரந்தாங்கல், செம்பராயநல்லூர், ஆரியமுத்துமோட்டூர், குப்பாத்தமோட்டூர் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற அதிமுகவை நிராகரிப்போம் என்ற மக்கள் கிராம சபை கூட்டத்தில் தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் பங்கேற்றார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: மக்கள் கிராம சபை கூட்டம் நடத்துபவர்களை கைது செய்வது அதிகார துஷ்பிரயோகத்தையே காட்டுகிறது, கிராம சபை என சொல்லக்கூடாது என சட்டம் எதுவுமில்லை. கிராம சபை நடத்தி நாங்கள் மக்களிடம் பேசுவதை அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.
உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை என புதுச்சேரி அரசை விமர்சித்த பிரதமர் தமிழகத்தை குறித்து பேசவில்லை. தமிழகத்தில் பேரம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். பேரம் முடியவில்லை, முடிந்த பிறகு சொல்வார்கள். யாதவர் சமுதாயத்தை இழிவாக பேசியதாக அமைச்சர் செல்லூர் ராஜிவை கண்டித்து பல இடங்களில் போராட்டம் நடைபெறுவது குறித்த கேள்விக்கு பதிலளித்த துரைமுருகன், தவறாக பேசினால் தானே செல்லூர் ராஜூ என்று கூறி சிரித்தார்.