குளிர்காலத்தில் உடல் நலத்தை காக்க உதவும் ஜூஸ் எது தெரியுமா?

குளிர்காலத்தில் பல்வேறு நோய்தொற்றுகள் ஏற்படுவது இயல்பு. எந்த நோய்தொற்றாக இருந்தாலும் அது உடலுக்கும், அன்றாட பணிகளுக்கும் சிரமத்தை அளிக்கும். இந்தப் பருவத்தில் கிடைக்கக்கூடிய காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிடுவது நம்முடைய ஆரோக்கியத்தை காத்துக்கொள்வதற்கு உதவும். குளிர் காலத்தில் நோய்கள் நம்மை அண்டாமல் காத்துக்கொள்வதற்கு காரட் - இஞ்சி இவை சேர்ந்த ஜூஸை குடிக்கலாம்.
காரட் குளிர்காலத்திற்கு ஏற்ற காய்கறி. இதில் பீட்டா கரோட்டின் உள்ளிட்ட ஆக்ஸிஜனேற்ற தடுப்பான்கள் (ஆன்ட்டிஆக்ஸிடெண்ட்) உள்ளன. இவை உடல் செல்களில் சேதத்தை ஏற்படுத்தும் நிலையற்ற அணுக்களுக்கு (ஃப்ரீ ராடிகல்ஸ்) எதிராக செயல்படக்கூடியது. வைட்டமின் சியும் இதில் உள்ளது. ஆகவே, காரட் நோய் எதிர்ப்பு ஆற்றலை அளிக்கக்கூடியதாகும்.

இஞ்சி
குளிர்காலத்தில் சளி, இருமல் மற்றும் அது சார்ந்த ஃப்ளூ என்னும் பாதிப்பு வரக்கூடும். இவை உடலை தாக்கினால் உடல் சோர்வுறும். இயல்பான பணிகளை செய்ய இயலாது. இவற்றை தடுக்கும் ஆற்றல் இஞ்சிக்கு உள்ளது. இந்த ஆரோக்கிய குறைபாடுகள் அழற்சியுடன் தொடர்புடையவை. ஆகவே, அழற்சியை தடுத்தால் இவற்றையும் தடுக்கலாம். இஞ்சிக்கு அழற்சியை தடுக்கும் ஆற்றல் (anti-inflammatory) உள்ளது.

காரட் - இஞ்சி சாறு (ஜூஸ்) தயாரிப்பது எவ்வாறு?
சளி, தொண்டை வலி போன்ற உபாதைகளை தடுப்பதற்கு காரட் - இஞ்சி ஜூஸ் உதவும். 1 காரட்டை கழுவி, தோல் சீவி பின்னர் நறுக்கிக்கொள்ளவும். சிறிய துண்டு இஞ்சியை எடுத்து துவைக்கவும் (நசுக்கவும்). அரை தேக்கரண்டி அளவு கறுப்பு மிளகு எடுத்துக்கொள்ளவும். 1 எலுமிச்சை பழத்தை சாறு பிழிந்து வைத்துக்கொள்ளவும்.இவை எல்லாவற்றையும் மிக்ஸியில் (blender) போட்டு கலக்கவும். எளிதாக குடிக்கும் பதம் வரும் வரை அடிக்கவும். பின்னர் வடிகட்டி அருந்தலாம். சுவைக்காக தேன் சேர்த்துக் கொள்ளலாம். அது தொண்டை வலிக்கு இதமாக இருக்கும்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
how-to-check-oxygen-concentration-if-doubted-as-covid-19-infected-and-ways-to-fight-with-covid-19
கோவிட்-19: ஆக்ஸிஜன் அளவை சோதிப்பது எப்படி?
what-are-the-benefits-in-adding-ghee-in-rice
தினமும் சாப்பாட்டில் நெய் கலந்து கொள்வதால் என்ன நன்மைகள்? வாங்க பார்க்கலாம்..
foods-that-help-to-boost-immunity-to-fight-against-infections-and-cold-full-of-vitamin-c
கொரோனா பரவல்: இயற்கையாக நோய் எதிர்ப்பு ஆற்றலை தரும் உணவுகள்
penugreek-tea-to-keep-lung-healthy-and-to-help-fight-against-infection-in-pandemic-season
கொரோனா காலம்: நுரையீரலுக்கு ஆரோக்கியம் தரும் மூலிகை டீ
herbs-that-help-to-shed-kilos-and-reduce-waist-cicumference-their-medicinal-benefits-and-methods-to-take-them
கொரோனா ஊரடங்கு: இடுப்புச் சதை குறைய எதை சாப்பிடலாம்?
tricks-make-sure-to-beat-the-heat-with-fennel-vetiver-and-sandalwood-paste
கோடைக்காலத்தில் சரும பாதுகாப்புக்கான இயற்கை முறைகள்
women-can-get-corona-vaccines-even-during-menstruation
மாதவிடாய் காலத்தில் பெண்கள் கொரோனா தடுப்பூசி போடலாமா..? கூடாதா…?
improving-immune-health-help-to-activate-over-300-enzymes-and-aid-to-cell-division-cell-growth
இரத்த ஓட்டத்தை சீராக்கும்... நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும்
the-lentil-that-manage-symptoms-of-diabetes-helping-for-weight-loss-could-prevent-from-heat-stroke-and-beneficial-for-pregnant-women
ஹீட் ஸ்ட்ரோக்கிலிருந்து பாதுகாக்கும்... சிசுவுக்கு நல்லது...
steaming-for-coron-treatment-what-are-the-things-you-should-not-forget
கொரோனா: நீராவி பிடிப்பது எவ்விதம் பயன் தரும்?
Tag Clouds

READ MORE ABOUT :