ஆன்லைன் மூலம் தான் ஆருத்ரா தரிசனம்..

by Balaji, Dec 28, 2020, 17:16 PM IST

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசன விழாவிற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பாஸ் பெற்றவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மாவட்ட நிர்வாகம் இவ்வாறு அறிவித்திருப்பது பக்தர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடக்கும் முக்கிய திருவிழாக்களில் ஒன்று ஆருத்ரா தரிசனம். சிவபெருமான் திருநடனமாடும் வைபவத்தைக் குறிக்கும் இந்த நிகழ்ச்சியைக் காண ஏராளமான பக்தர்கள் சிதம்பரம் கோயிலுக்கு வருவர்.
கொரானா தொற்று அச்சம் காரணமாகப் பொதுமக்கள் அதிகளவில் பங்கேற்பதைத் தவிர்க்கத் தரிசன மகோத்சவ நிகழ்ச்சிகளில் வெளியூர் பக்தர்கள் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டது .

இதைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் முறையான கொரானா கட்டுப்பாடு வழிமுறைகளுடன் அனைத்து பக்தர்களையும் அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டது.ஆனால் உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவைக் கண்டுகொள்ளாமல் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தவர்கள் மட்டுமே இந்த விழாவில் பங்கேற்க முடியும் என கடலூர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.வரும் 29ஆம் தேதி சிதம்பரம் நடராஜர் கோயிலைச் சுற்றியுள்ள வீதிகளில் நடைபெறும் தேர்த் திருவிழாவில் கலந்துகொள்ள விரும்பும் பக்தர்கள் https://aruthracarfest.com என்ற இணையதளத்திலும் 30 ஆம் தேதி சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குள் நடைபெற இருக்கும் ஆருத்ரா தரிசனத்தில் பங்குபெற விரும்பும் பக்தர்கள் https://aruthraonline.com என்ற இணையதளத்திலும் பதிவு செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட நிர்வாகத்தின் இந்த உத்தரவு பக்தர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது ஏற்கனவே சில தினங்களுக்கு முன் நடந்த திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி வைபவத்திற்கு இதேபோல் ஆன்லைன் பதிவு செய்தால்தான் தரிசனம் செய்ய முடியும் என்ற நடைமுறை இருந்தது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. தற்போது அதே போன்ற நடைமுறை சிதம்பரத்திலும் பின்பற்ற வேண்டும் என உத்தரவிட்டிருப்பது பக்தர்களை வேதனைக்கு உள்ளாக்கியிருக்கிறது.

You'r reading ஆன்லைன் மூலம் தான் ஆருத்ரா தரிசனம்.. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை