திண்டிவனத்தை அடுத்த சர்வதேச நகரமான ஆரோவில் பகுதியில் அதிக அளவில் வெளிநாட்டுப் பறவைகள் உள்ளது . அடர்ந்த காட்டுப்பகுதி என்பதால் பல நாட்டுப் பறவைகளும் இங்கே தஞ்சம் அடைவது வழக்கம். சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறைந்த ஆரோவில் சர்வதேச நகரத்தில் பல்வேறு வகையான பறவை இனங்கள் வாழ்ந்து வருகிறது. அதேசமயம் சமூக விரோதிகள் சிலர் இந்த பறவைகளை வேட்டையாடுவதும் வாடிக்கையாகி வருகிறது.
நேற்று ஆரோவில்லில் உள்ள அடர்ந்த வனப் பகுதியில் ஒரு ஆலமரத்தில் இருந்த சுமார் 100க்கும் மேற்பட்ட வெளிநாட்டுப் பறவைகள் இறந்த நிலையில் கிடந்தது. அந்த பறவைகள் ஆலமரத்தைச் சுற்றி கும்பல் கும்பலாக இறந்து கிடந்தது. இதைக்கண்ட ஆரோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து ஆரோவில் நிர்வாகிகள் திண்டிவனம் வனத்துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் இது குறித்து ஆய்வு செய்தனர்.
அதில் சமூகவிரோதிகள் சிலர் இந்த பறவைகளுக்கு விஷம் கொன்றது தெரியவந்தது. பின்னர் இறந்து கிடந்த பறவைகளைப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.இப்படி கொடூரச் செயலை செய்த விஷமிகள் யார் என்பது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.