ஜோதிடருக்கே நேரம் சரி இல்லை... சிக்கலில் ஷெல்வி

Advertisement

பொதுவாக ஒருவருக்கு ஜாதக ரீதியாக நேரம் சரியில்லை என்று கருதினால் ஜோதிடரை அணுகுவது வாடிக்கை. என்ன காரணத்தினால் இப்படி இருக்கிறது என்ன செய்தால் இதை நிவர்த்தி செய்யலாம் என்றெல்லாம் ஜோதிடர்கள் சொல்லும் ஆலோசனையைக் கேட்டு அதன்படி நடப்பவர்கள் ஏராளம்.ஏதோ ஒரு ஜோதிடர் ஏதாவது ஒரு விஷயத்தைச் சொல்லி அது உள்ளபடியே கழித்துவிட்டால் அப்புறம் அவருக்கு நல்ல பெயர் ஏற்பட்டு விடும் அவர் சொல்வதைப் பலரும் கண்ணை மூடிக்கொண்டு நம்புவார்கள். அப்படி நம்பாத சிலருக்கு சில ஜோதிடர்கள் சவால் விடுவதும் உண்டு.

அப்படி சவால் விட்டு இப்போது சிக்கித் தவிக்கிறார் ஜோதிடர் ஷெல்வி. இவருக்கு யதார்த்த ஜோதிடர் என்ற பட்டமும் உண்டு.தற்போது தமிழக பா.ஜ.க.வில், அறிவுசார் பிரிவுத் தலைவராக ( ரஜினிக்காக வழியே வந்தாரே..அந்த அர்ஜுன மூர்த்தி வகித்த பதவி) உள்ள ஜோதிடர் செல்வி , டிசம்பர் மாதத்திற்குள் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்கவில்லை என்றால் ஜோதிடம் பார்க்கும் தொழிலையே விட்டு விடுவதாக அறிவித்திருந்தார். இந்த நிலையில், அவரது கணிப்பு பொய்யாகி முட்டையைப் பலரும் கிண்டல் அடிக்கிறார்கள் அவர் இப்படி சவால் விட்ட வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஏற்கெனவே கொரோனாவால் மக்களை முடக்கிப் போட்டிருந்த 2020 ஆம் ஆண்டு எல்லோருக்கும் சிறப்பாக இருக்கும் என்று முன் கூட்டியே( ?) கணித்த யதார்த்த ஜோதிடரும் இவர்தான்.இதே போலத்தான், நடிகர் ரஜினிகாந்த் டிசம்பர் மாதத்திற்குள் அரசியல் கட்சி தொடங்குவார் என்றும், அப்படி அவர் தொடங்கவில்லை என்றால் தான் பார்த்துவரும் ஜோதிடத் தொழிலையே விட்டு விடுவதாகவும் யதார்த்தமாகச் சவால் விட்டிருந்தார் ஜோதிடர் ஷெல்வி.

இந்நிலையில், யதார்த்த ஜோதிடர் ஷெல்வியின் கணிப்பை, ரஜினி அரசியலுக்கு வரப்போவதில்லை என்ற அறிக்கை பதம் பார்த்துவிட்டது.இதை அடுத்து தற்போது ஷெல்வி ஜோதிட தொழிலைக் கைவிடுவாரா ?அல்லது தனது கணிப்பு தவறு என்பதை ஒப்புக்கொள்வாரா? என சமூக வலைத்தளங்களில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.ஆனால் ஷெல்வியிடம் இருந்துதான் எந்த பதிலும் இல்லை.

Advertisement
மேலும் செய்திகள்
actress-mahalakshmi-s-husband-ravinder-is-in-trouble-again
சிக்கிய பென் டிரைவ்,ஆவணங்கள்... நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தருக்கு மீண்டும் சிக்கல்
he-broke-his-promise-so-we-broke-up-ramarajan-open-talk-on-nalini
சத்தியம் செய்ததை மீறினார்... அதனால் பிரிந்தோம்- நளினி குறித்து ராமராஜன் ஓபன் டாக்
hospital-built-by-napoleon-grandfather-greeted-the-boy
நெப்போலியன் கட்டிய மருத்துவமனை... நீ நடப்பாய் சிறுவனை வாழ்த்திய பெரியதம்பி தாத்தா.... வாக்கு பலித்த அதிசயம்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
/body>