மாஸ் அணிந்து, சேனிடைசர் பயன்படுத்தி பாதுகாப்பாக இருக்கும் நிலையிலும் பலருக்கு கொரோனா பரவியது. ஊரடங்கு தளர்வில் கொரோனா விதிகளை பலர் மறந்துவிட்டு மாஸ்க் அணியாமல் வலம் வந்துக் கொண்டிருக்கின்றனர். டிசம்பர் 9ம் தேதி நடிகர் நிஹாரிகா- சைதன்யா திருமணம் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள அரண்மனை ஓட்டலில் நடந்தது. தடபுடலாக நடந்த இந்த திருமணத்தில் நடிகர்கள் சிரஞ்சீவி, பவண் கல்யாண், வருண் தேஜ் என பலரும் கலந்துகொண்டனர் . இதில் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என களை கட்டியது. சங்கீத் நிகழ்ச்சியில் சிரஞ்சீவி உள்ளிட்ட குடும்பத்தினர் நடனம் ஆடினார்கள்.
மணமகள் நிஹாரிகாவை அவரது சகோதரர் வருண் தேஜ் தோளில் சுமந்து வந்து நடன அரங்கில் இறக்கி விட்டார். ஆடம்பரமாக நடந்த திருமணம் முடிந்து அனைவரும் ஐதராபாத் திரும்பினார்கள். சமீபத்தில் நிஹாரிகா-சைதன்யா தம்பதி மாலத்தீவுக்கு தேனிலவு புறப்பட்டு சென்றனர். அவர்கள் புத்தாண்டையும் அங்கேயே கொண்டாட திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் திருமண விழாவில் கலந்துகொண்ட ராம் சரணுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். அதேபோல் வருண் தேஜூக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
அவரும் தனிமைப்படுத்தலில் உள்ளார். இதுகுறித்து வருண் தேஜ் கூறும்போது, எனக்கு கோவிட் 19 பாசிடிவ் ஆகி இருப்பதுடன் சிறு சிறு அறிகுறிகள் தென்பட்டதால் வீட்டில் என்னை தனிமைப் படுத்திக்கொண்டிருக்கிறேன். தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுத்துள்ளேன். விரைவில் குணமாகி வருவேன். அனவருக்கும் நன்றி; என தெரிவித்திருக்கிறார். மிஸ்ட்ர், ஃபிடா போன்ற படங்களில் நடித்திருக்கிறார் வருண் தேஜ். தற்போது மேலும் 3 படங்களில் நடித்து வருகிறார். நிஹாரிகா திருமண விழாவில் கலந்துக்கொண்ட்ட 2 நடிகர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து திருமணத்தில் பங்கேற்ற அனைவரையும் கொரோனா பரிசோதனைக்குள்ளாவர்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.