ஒடிடியில் வெளியாகும் படம் பற்றி மாதவன் - ஷ்ரத்தா..

by Chandru, Dec 30, 2020, 13:09 PM IST

மாதவன் மற்றும் ஷ்ரத்தா ஶ்ரீநாத் நடிப்பில் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான 'மாறா' படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டது அமேசான் ப்ரைம் வீடியோ ஒடிடி தளத்தில் வெளியாகிறது. காதலும் நம்பிக்கையும் நிறைந்ததோர் உலகத்தினுள் நம்மை அழைத்துச் செல்லும் இத்திரைப்படமானது காண்போரின் முகத்தில் புன்னகையைப் பூக்கச் செய்து இதயங்களைக் கவரும். திலீப் குமார் இயக்கத்தில், ப்ரமோத் பில்ம்ஸின் ப்ரதீக் சக்ரவர்த்தி மற்றும் ஷ்ருதி நல்லப்பா ஆகியோர் தயாரித்த இத்திரைப்படத்தில் மாதவன் மற்றும் ஷ்ரத்தா ஶ்ரீநாத் ஆகியோர் ஜோடியாக நடிக்கின்றனர். மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட தமிழ்த் திரைப்படமான 'மாறா' படத்தின் ட்ரெய்லரை அமேசான் ப்ரைம் வீடியோ இன்று வெளியிட்டது. மாதவன் மற்றும் ஷ்ரத்தா ஶ்ரீநாத் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இத்திரைப்படத்தை திலீப் குமார் இயக்க ப்ரமோத் பிலிம்ஸின் ப்ரதீக் சக்ரவர்த்தி மற்றும் ஷ்ருதி நல்லப்பா ஆகியோர் தயாரித்துள்ளனர்.

இவர்களுடன் அலெக்ஸாண்டர் பாபு, ஷிவதா நாயர், மௌலி, பத்மாவதி ராவ் மற்றும் அபிராமி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படமானது ஜனவரி 8, 2021 அன்று அமேசான் ப்ரைம் வீடியோவில் உலகம் முழுவதும் உள்ள 200 நாடுகளில் வெளியிடப்படுகிறது. பார்வையாளர்களை வண்ணமயமானதோர் உலகத்திற்கு அழைத்துச்செல்லும் இந்த ட்ரெய்லரானது பாருவின் (ஷ்ரத்தா ஶ்ரீநாத்) வாழ்க்கையை காட்டுவதோடு மட்டுமில்லாமல், அவளின் புதிய வீட்டில் அவளுக்குக் கிடைக்கும் ஓவியங்கள் நிறைந்ததோர் புத்தகத்தையும் விவரிக்கிறது. அந்த ஓவியங்களால் ஈர்க்கப்பட்ட அவள் அவற்றை வரைந்த ஓவியனான மாறாவை (மாதவன்) தேடிச்செல்கிறாள். அவளின் பயணமானது வண்ணங்கள், இசை, காதல், நம்பிக்கை, மற்றும் பல உணர்வுகள் இழைந்தோட ஓர் பரிபூரண அனுபவமாய் அமைகிறது. 'மாறா' படத்தில் தனது கதாப்பாத்திரம் பற்றி மாதவன் கூறியாதாவது: மாறா எனும் சொல் ஓரு தனி மனிதனை மட்டும் குறிக்காமல் பல இனிமையான மனிதர்களைக்கொண்ட ஓர் சிறு உலகத்தையே குறிக்கிறது.

அம்மனிதர்களின் தினசரி வாழ்வுகளும் அவர்களின் உரையாடல்களும் மிகவும் இயல்பானவை, ஆனால் அவர்களின் அனுபவங்களோ பார்வையாளர்கள் தங்களை அவர்களில் ஒருவராய் உணரவைக்குமளவு அலாதியானவை. என்னுடைய கதாபாத்திரமானது தன்னை சுற்றியுள்ள மனிதர்களிடம் பழகுவதில் அவன் காட்டும் மையமான அன்பை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. அந்த அன்பே அவனைப் பார்வையாளர்களுக்கு மிகவும் விரும்பத்தக்கதோர் கதாபாத்திரமாக உருவாக்குகிறது. பெரிதும் அலட்டிக் கொள்ளாமல் பலர் வாழ்வுகளில் அவன் மாற்றங்களை உருவாக்குகிறவனாவான். கதாபாத்திரத்தின் அந்த குணாதிசயமே என்னை வெகுவாய் ஈர்த்தது. இத்திரைப்படமானது அந்த உறவுகளையும் மனிதர்கள் ஒருவரோடு ஒருவர் பகிர்ந்து கொள்ளும் அழகான தருணங்களையும் மையமாகக் கொண்டுள்ளது. ஒரு இனிய உலகமது. அவ்வுலகை உயிர்ப்பிக்கப் பல முன்னணி நடிகர்களின் அபாரமான நடிப்பு உதவியுள்ளது.

அவர்களில் பலர் மீது நான் திரையிலும் திரைக்கு அப்பாலும் கொண்டுள்ள அபிமானமானது அவர்களுடன் நான் நடித்த காட்சிகளுக்கு மெரு கூட்டியது மட்டுமில்லாமல் எனக்கு என்றும் நீங்கா நினைவுகளாகவும் அமையக் காரணமாயிருந்தது. இத்திரைப்படத்தைக் காணும் பார்வையாளர்களும் இதனை நாங்கள் படைக்கும்போது பெற்ற முழுமையானதோர் அனுபவத்தைப் பெறுவார்கள் என நம்புகிறேன். மாறா என் மனதிற்கு மிகவும் நெருக்க மானதோர் படைப்பு. உங்களுக்கும் அவ்வாறே அமையுமென நம்புகிறேன். இவ்வாறு மாதவன் கூறினார். 'மாறா' படத்தில் தான் ஏற்று நடித்த கதாபாத்திரத்தைப் பற்றிப் நடிகை ஷ்ரத்தா ஶ்ரீநாத் கூறியது: பாரு என்பவள் தனக்கு என்ன வேண்டுமெனத் தானே அறியாதவள். ஆனால் தனக்கு என்ன தேவை இல்லை என்பதை அறிவாள். அவளிடமுள்ள தீர்க்கமும் மனிதத்தின் மீது அவள் கொண்டுள்ள நம்பிக்கையும் அவளை சக மனிதர்களிடம் ஈர்க்கிறது.

அவளிடம் பழகிய சிறிது நேரத்திலேயே அவளுடன் பல காலம் பழகியதோர் உணர்வைக் கொடுக்கக் கூடிய குணமானது அவளின் சிறப்பம்சமாகும். அவள் இந்த கதையின் உலகினை சுற்றித் திரியும் போதும் அவ்வுலகினில் உள்ள புதிர்களில் தொலைந்து பல ஆச்சரியமூட் டும் கதைகளையும் மனிதர்களையும் சந்திக்கும்போதும் அவள் தன்னை ஒரு சிறுமியாகவே உணர்கிறாள் என்பது என்னை வெகுவாக ஈர்த்தது. இவ்வாறு ஷ்ரத்தா தெரிவித்தார். இப்படத்தின் கதையானது, ஓர் கடற்கரையோர ஊரில் தான் சிறுமியாய் இருந்தபோது கேட்ட கதையை ஓவிய வடிவத்தில் காண்கிறாள் .அதனை வரைந்த ஓவியனான மாறனைத் தேடிச்செல்கிறாள். இப்படம் இந்தியா மற்றும் 200 நாடுகளில் உள்ள ப்ரைம் சந்தா தாரர்கள் 'மாறா' படத்தை அமேசான் ப்ரைம் வீடியோவில் ஜனவரி 8 முதல் தமிழில் ஒளிபரப்பாகிறது.

You'r reading ஒடிடியில் வெளியாகும் படம் பற்றி மாதவன் - ஷ்ரத்தா.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை