7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வரும் 4-ம் தேதி முதல் மருத்துவ கலந்தாய்வு நடக்கிறது. இந்தியத் தொகுப்பில் ஒதுக்கப்பட்ட இடங்களில் மீதமுள்ள இடங்கள் தமிழகத்துக்குத் திரும்ப அளிக்கப்பட்டது. அதில் அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்காக இணைக்கப்பட்ட 7.5 சதவீத இட ஒதுக்கீடு அடிப்படையில் உருவாகும் இடங்களுக்குக் கலந்தாய்வு நடக்கிறது.ஜனவரி 5-ம் தேதி பொதுப்பிரிவு மாணவர்களுக்கு மறு கலந்தாய்வும் நடைபெறுகிறது. தினமும் இரண்டு கட்டங்களாக நடக்கும் இந்த கலந்தாய்வு வரும் 11-ம் தேதி வரை நடக்கிறது.
முதல் மூன்று நாட்கள் பொது கலந்தாய்வு , பின்னர் இட ஒதுக்கீடு உள்ளிட்ட பிற ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வும் நடக்கிறது.ஏற்கனவே நடந்து முடிந்த பொது கலந்தாய்வில் தேர்வான மாணவர்கள் சேராமல் இருப்பின் அதனால் ஏற்பட்ட காலி இடங்கள், அகில இந்திய ஒதுக்கீட்டில் தமிழக அரசு வழங்கிய இடங்களில் யாரும் சேராமல் மீதமுள்ள இடங்கள் மீண்டும் தமிழகத்துக்கே கிடைத்தது. இந்த இரண்டாம் கட்ட கலந்தாய்வு அந்த இடங்களுக்கும் சேர்த்து நடக்கிறது.