சென்னை கிண்டியில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் சுமார்600 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். நேற்று இவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் 80 பேருக்குத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.எந்தவித அறிகுறியும் இன்றி கொரோனா தொற்று இருந்த 80 ஊழியர்களும் கிண்டி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
இதன் காரணமாக அந்த ஓட்டலில் நடக்க இருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் வருகிற 10-ந் தேதி வரை ரத்து செய்யப்பட்டு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.நட்சத்திர ஓட்டலில் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால் சென்னை மாநகராட்சி எல்லையில் உள்ள மற்ற ஓட்டல் ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.