திருப்பதி கோவில் இலவச தரிசன டிக்கெட்டுகள் மீண்டும் விநியோகம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசன டிக்கெட்டுகள் இன்று நள்ளிரவு 12 மணி முதல் மீண்டும் வழங்கப்பட உள்ளது எனத் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

by Balaji, Jan 2, 2021, 20:11 PM IST

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசியையொட்டி 25ஆம் தேதி முதல் 3ம் தேதி வரை சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பக்தர்கள்அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்காக ரூபாய் 300 சிறப்பு நுழைவு தரிசனம் மற்றும் இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட்டது. 3ஆம் தேதி நள்ளிரவு முதல் ஆகம முறைப்படி சொர்க்கவாசல் மூடப்பட உள்ளது.

தொடர்ந்து 4ஆம் தேதி முதல் வழக்கமான தரிசனத்திற்குப் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். இதற்கான 300 ரூபாய் சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டு உள்ளது. இலவச தரிசன டிக்கெட்டுகள் இன்று (சனிக்கிழமை) நள்ளிரவு 12 மணி முதல் திருப்பதியில் உள்ள பூ தேவி காம்ப்ளக்ஸ் மற்றும் விஷ்ணு நிவாசம் பக்தர்கள் விடுதியில் உள்ள கவுண்டர்களில் வழங்கப்பட உள்ளது.

இதில் டிக்கெட்டுகளை பெறும் பக்தர்கள் 4-ஆம் தேதி காலை முதல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். தரிசனத்திற்கான இலவச டிக்கெட்களை ஆதார் அடையாள அட்டையை வைத்து ஒருநாள் முன்னதாக வழங்கப்படும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

You'r reading திருப்பதி கோவில் இலவச தரிசன டிக்கெட்டுகள் மீண்டும் விநியோகம் Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை