நிச்சயமா நீ முதல்வராக முடியாது ஸ்டாலினுக்கு அழகிரி சாபம்

நிச்சயமாக ஸ்டாலின் முதல்வராக வர முடியாது எனது ஆதரவாளர்கள் வரவும் விட மாட்டார்கள் என முக அழகிரி பேசினார்

by Balaji, Jan 3, 2021, 19:37 PM IST

முன்னாள் மத்திய அமைச்சர் முக அழகிரி மதுரையில் வசித்து வருகிறார் திமுகவில் பவர்ஃபுல்லான இடத்தில் இருந்த அவர் கலைஞரின் மறைவிற்குப் பிறகு ஓரங்கட்டப்பட்டார். சில காலம் அமைதியாக இருந்த அவர் தற்போது தேர்தல் வரும் நேரம் பார்த்து தொடங்கியிருக்கிறார்.இன்று மதுரை அருகே உள்ள என்ற பரவை கிராமத்தில் துவாரகா பேலசில் தனது ஆதரவாளர் சந்தித்து ஆலோசனை நடத்தியிருக்கிறார்.அழகிரி நடந்த பொதுக்கூட்டத்தில் பேசி தனது அதகளத்தை ஆரம்பித்திருக்கிறார்.அவர் பேசியதாவது: கலைஞருக்குப் பிறகு ஸ்டாலின் தான் திமுகவின் தலைவர், முதல்வர் என அவரிடமே சொன்னேன் இதை ஸ்டாலின் மறுக்க முடியுமா..? அவரது மனசாட்சிக்குத் தெரியும். பின்னர் ஏன் எனக்கு ஸ்டாலின் துரோகம் செய்தார் எனத் தெரியவில்லை. நான் என்ன தவறு செய்தேன்...?

திருமங்கலம் இடைத்தேர்தல் வெற்றியை இந்தியாவே உற்றுநோக்கியது. திருமங்கலம் இடைத்தேர்தலில் முதலில் பணி செய்ய விரும்பவில்லை. கலைஞர் வலியுறுத்தலால் தேர்தல் பணி செய்தோம். திருமங்கலம் இடைத்தேர்தல் பார்முலா என்கிறார்கள். அப்படியொரு பார்முலாவே கிடையாது. துரோகிகள், சதிகாரர்களை எதிர்ப்பதற்கான முதல் படிக்கட்டு இந்த கூட்டம். இப்போதும் நான் உங்களில் ஒருவன்;. மதுரை நமது கோட்டை இதை யாராலும் மாற்ற முடியாது.

ஸ்டாலினுக்குப் பதவி வாங்கி கொடுத்தது நான்தான். மத்திய அமைச்சர் பதவி தேவையில்லை என்றேன் ஆனால் வலுக்கட்டாயமாக எனக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுத்தனர். ஸ்டாலினுக்கு பொருளாளர் பதவியைக் கலைஞரிடம் கேட்டு வாங்கி கொடுத்ததே நான்தான் .பொதுக்குழுவே வருகன்னு எனக்கு போஸ்டர் அடித்ததுக்காக நிர்வாகிகளை நீக்கினீங்க. உனக்கு அடிக்கலயா ? வருங்கால முதல்வரே, முதல்வரேன்னு... நிச்சயமா நீ முதல்வராக முடியாது. என்னுடைய ஆதரவாளர்கள் உன்னை முதல்வராக விடமாட்டார்கள் இவ்வாறு அழகிரி பேசினார். அழகிரியின் இந்தப் பேச்சு அவரது ஆதரவாளர்கள் மத்தியில் உற்சாகத்தையும், திமுகவினர் மத்தியில் ஒருவித திகிலையும் ஏற்படுத்தியிருக்கிறது.

More Tamilnadu News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்