தமிழக அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு

by Balaji, Jan 4, 2021, 19:56 PM IST

தமிழக அரசு ஊழியர்களில் சி ஈ மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு 30-ம் நாள் ஊதியத்தை போனசாக வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: முறையான காலமுறைச் சம்பளம் பெறும் அனைத்து "C" மற்றும் "D" பிரிவு அரசுப் பணியாளர்கள், உள்ளாட்சி மன்றப் பணியாளர்கள், அரசின் மானியம் பெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் காலமுறைச் சம்பளம் பெறும் ஆசிரியர்கள், பணியாளர்கள் ஆகியோருக்கு திங்களொன்றுக்கு 30 நாட்கள் என்ற அடிப்படையில், நாட்கள் ஊதியத்திற்கு இணையான தொகையை 2019-2020-ம் கணக்காண்டிற்கு தற்காலிக மிகை ஊதியம் மற்றும் சில்லறை செலவினத்தின் கீழ் மாத அடிப்படையில் நிலையான ஊதியம் பெற்று வந்த முழு நேர மற்றும் பகுதி நேரப் பணியாளர்கள் மற்றும் சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் பணியாளர்களுக்கு சிறப்பு தற்காலிக மிகை ஊதியம் பொங்கல் பண்டிகை கொண்டாடிட ஏதுவாக வழங்க அரசு முடிவெடுத்துள்ளது.

2018-2019-ஆம் கணக்காணடிற்கு மற்றும் -D" பிரிவு சார்ந்த பணியாளர்கள், உள்ளாட்சி மன்றப் பணியாளர்கள் அரசு மானியம் பெறும் கல்வி நிறுவனங்களின் பணியாளர்கள் ஆகியோருக்கு திங்களொன்றுக்கு 30 நாட்கள் என்ற அடிப்படையில், 30 நாட்கள் ஊதியத்திற்கு இணையான தொகையை தறகாலிக மிகை ஊதியமாகக் கணக்கிட்டு உச்சவரம்பினை ரூ. 3,000/- ஆகக் கொண்டு, தற்காலிக மிகை ஊதியத் தொகை வழங்கப்பட்டது. 2019-2020-ஆம் கணக்காண்டிற்கு C மற்றும் "D' பிரிவு சார்ந்த, முறையான காலமுறைச் சம்பளம் பெறும் அனைத்து நிரந்தர மற்றும் தற்காலிக அரசுப் பணியாளர்கள், உள்ளாட்சி மன்றப் பணியாளர்கள், அரசு மானியம் பெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் பணியாளர்கள் ஆகியோருக்கு திங்களொன்றுக்கு 30 நாட்கள் என்ற அடிப்படையில் ரூ.3,000/- என்ற உச்சவரம்பிற்கு உட்பட்டு தற்காலிக மிகை ஊதியமாக வழங்கிட அரசு ஆணையிடுகிறது.

2019-2020-ஆம் கணக்காண்டில் குறைந்தபட்சம் 240 நாட்கள் அல்லது அதற்கு மேலாக பணிபுரிந்த சில்லரை செலவினத்தின் கீழ் மாத அடிப்படையில் அடிப்படையில் நிலையான ஊதியம் பெற்று வந்த முழு நேர மற்றும் பகுதி நேரப் நேரப் பணியாளர்கள், தொகுப்பூதியம் பெற்று வந்த பணியாளர்கள், தொகுப்பூதியம் / தொகுப்பூதியம் / சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று வந்த சத்துணவுத் திட்டப் பணியாளர்கள் | ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டத்தில் பணிபுரியும் பணியாளர்கள் (அங்கன்வாடி பணியாளர்கள், குறு அங்கன்வாடி பணியாளர்கள்), கிராம உதவியாளர்கள் தினக்கூலி அடிப்படையில் பணியாற்றும் பணியாளர்கள் மற்றும் ஒரு பகுதி தினக்கூலிகளாக பணியாற்றி பின்னர் தொடர்ந்து தொடர்ந்து நிரந்தர பணியாளர்களாக பணியாற்றியவர்களுக்கும் சிறப்பு தற்காலிக தற்காலிக மிகை ஊதியம் ரூ.1,000/- வழங்கி அரசு ஆணையிடுகிறது.

இவ்வாறு அனுமதிக்கப்படும் தற்காலிக மிகை ஊதியமானது 31-03-2020-ஆம் நாளன்று உள்ள C மற்றும் D* பிரிவு ஊதியத்தின் அடிப்படையில் கணக்கிடப்படவேண்டும். மாதாந்திர ஊதியம் ரூ.3,000/- என்பதை உச்சவரம்பாகக் கொண்டு, தற்காலிக மிகை ஊதியத்தொகை கணக்கிடப்படவேண்டும். திருத்திய சம்பள வீதத்திற்கு முந்தைய சம்பள விதங்களில் / திருத்திய சம்பள வீதங்களில் சம்பளம் பெறுபவர்களைப் பொறுத்தவரையில், திங்களொன்றுக்கு ரூ. 3,000/- என்ற உச்ச வரம்பிற்கு உட்பட்டு அவர்கள் பெற்ற ஊதியத்தின் அடிப்படையில், தற்காலிக மிகை ஊதியம் கணக்கிடப்படவேண்டும். இவ்வாறு அரசு உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

You'r reading தமிழக அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை