ட்விட்டர் உலகின் ராஜா தமிழக பா .ஜ.க எச்.ராஜா ட்விட்டர் பதிவில் "ராணுவத்தை எதிர்கொள்ள தயங்காத கூட்டம்" என்று ஒரு போட்டோவை பதிவிட்டிருந்தார். ராணுவத்திற்கே பயப்படாத கூட்டம் இப்படி போலீசை கண்டு பயப்படுகிறது" என்று சொல்லாமல் சொல்லியுள்ளார். இந்த போட்டோவிற்கு நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
சென்னையில் நேற்று முன்தினம் நடந்த காவிரி மீட்பு போராட்டம் மிக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. போராட்டத்தில் போலீசார் போராட்டக்காரர்களை தாக்குவது போலவும் பதிலுக்கு போராட்டக்காரர்கள் போலீசை திரும்ப தாக்குவது போலவும் விடியோக்கள் வெளியான வண்ணம் உள்ளன
இந்நிலையில் நடிகர் சௌந்தர் போலீசாரிடம் இருந்து விடுபட கை கூப்பி கும்பிடுவது போல ஒரு புகைப்படத்தை எடுத்து எச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதற்கு பதில் கூறும் விதமாக நடிகர் சௌந்தர் "2017ல் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் என் சகோதரர்களை, சகோதரிகளை, தாய்மார்களை, குழந்தைகளை அடிக்கவேண்டாம் என்று நான் போலீசாரிடம் கை எடுத்து கேட்டுக்கொண்ட புகைப்படத்தை ஐபிஎல் போராட்டக்களத்தில் எடுத்ததுபோன்று பதிவிட்டுள்ளீர்கள். உங்கள் அறிவை கண்டு வியக்கிறேன்" என்று நக்கல் அடித்துள்ளார்.
இது மட்டும் இல்லாமல் எச்.ராஜாவின் அட்மினையும் "ஏம்பா அட்மின் இப்படி தப்பு தப்பா போட்டோவை எடுத்து போட்டு எங்க தலைவர் பெயரை கெடுக்குறது நீ தானா ?" என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.