கிரிக்கெட்டு எதற்கு, முதல்ல தரங்கெட்டுப் போன அதிகார வர்க்கத்தை சரிகட்டு: பா.விஜய்யின் ஆவேசக் கவிதை

Advertisement

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்காமல் ஐபிஎல் போட்டி நடைபெறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கவிஞர் பா.விஜய் ஆவேசக் கவிதை ஒன்றை எழுதி வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட கவிதை:

தறிகெட்டுப்போன நாட்டுக்கு எதுக்குடா கிரிக்கெட்டு
முதல தரங்கெட்டுப் போன அதிகார வர்க்கத்தை சரிகட்டு

சே சேன்னு கூட்டம் மெதப்புல மெதக்கலாம் சேப்பாக்கம்
அத செங்கல் செங்கலா எங்க சிங்கக் கூட்டம் தூள் தூளாக்கும்

கடற்கரை ஓரத்தை பூட்டி வைச்சுப்புட்டியே காவலாளி
புயல் காத்துக்கு பூட்டி போட்டவன் யாருடா புத்திசாலி

ஆட்டம் நடக்கட்டும் மட்டைய தூக்கி அடிப்பாய்ங்க
எங்க பசங்க ஒருநாள் பாராளுமன்றத்தையே புடிப்பாய்ங்க

விளம்பரத்துல தன்னையே வித்தவனைல்லாம் வீரன்ற
தேச எல்லையில செத்த எத்தன பேருக்கு இது தேவைன்ற

ஒரே இந்தியா ஒரே ரத்தம்னு கூவுறியே
அட காவிரிக்கு மட்டும் கட்டத்தை மாத்தி தாவுறியே

ஆவட்டும் சாரே ஆனவரைக்கும் ஊற ஏமாத்து
எங்க பச்ச தமிழனுக்கு புரிஞ்சு போச்சு உன் பம்மாத்து

காவிரி எங்க கரிகாலனால தான் டா ஆறாச்சு
எங்க தொண்டய மிறிச்சு தொண்டுனு சொல்ற வாய் சேராச்சு

காவிரியில பலபேர் கால் கழுவ மட்டும் தான் கால் வச்சான்
அப்படி வீணான தண்ணியில விவசாய தமிழன் தான் நெல் வச்சான்

பால் குடிச்ச சிசிவோட கழுத்த நெறுச்ச பேய்க்கூட்டம்
உங்கள வெறட்டி அடிச்சு வெளுக்கத்தாண்டா இந்த போராட்டம்

தறிகெட்டுப் போன நாட்டுக்கு எதுக்குடா கிரிக்கெட்டு
முதல தரங்கெட்டுப் போன அதிகார வர்க்கத்தை சரிகட்டு'

இவ்வாறு பா.விஜய் தனது கவிதையில் கூறியுள்ளார்.

Advertisement
மேலும் செய்திகள்
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
alya-manasa-dances-with-vj-prathu-for-top-tucker-song-raja-rani-2
நடிகை ஆல்யா மானசா டாப் டக்கர் டான்ஸ்!
actress-becomes-addict-to-smoking-in-bigg-boss
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் இந்த பழக்கத்துக்கு அடிமையாகி விட்டேன்…! பிரபல நடிகை பகீர்
vikram-and-dhuruv-vikram-new-picture-goes-to-viral
4 நாட்களுக்கு பின் விக்ரமிற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய துருவ்
actress-parvati-nair-latest-hot-photos
பிளாக் அண்ட் ஒயிட் சேலையில் கிறங்க வைத்த பார்வதி நாயர்
actor-daniel-has-been-accused-of-sexually-abusing-young-women
இளம் பெண்களிடம் அத்துமீறி பேசும் நடிகர் டேனியல்
en-rasavin-manasile-2-actor-rajkiran-new-statement
என் ராசாவின் மனசிலே-2 படம் குறித்து நடிகர் ராஜ்கிரண் அறிக்கை
two-election-observers-in-tamil-nadu-of-kerala-cadre-have-been-called-back-in-view-of-tainted-background
திருப்பி அனுப்பப்பட்ட தமிழக தேர்தல் பார்வையாளர்கள்
express-train-rolled-backwards-nearly-35-kilometre-in-uttarakhand-state
35 கிலோ மீட்டர் தூரம் பின்னோக்கி ஓடிய ரயில்
customer-accused-that-zomato-delivery-person-had-hit-her
மூக்கில் குத்தி செருப்பால் அடித்து ஒரு ஸொமட்டோ டெலிவரி
/body>