தியேட்டர்களில் இருக்கைகள்: அரசுக்கு உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு

by Balaji, Jan 8, 2021, 12:53 PM IST

50 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்பட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் திரையரங்குகள் 100 சதவீத இருக்கை வசதிகளுடன் செயல்படலாம் என அனுமதி அளித்து அரசு உத்தரவிட்டது. இதற்கு மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. தமிழக அரசின் இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என வழக்கறிஞர்கள் போனி பாஸ் முத்துக்குமார், ராம்குமார் ஆகியோர் சார்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தாக்கல் செய்யபட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஸ், ஆனந்தி ஆகியோர் அடங்கிய அமர்வில்இன்று விசாரணைக்கு வந்தது விசாரணையின் போது நீதிபதிகள் கொரோனா தொற்று சமயங்களில் பொருளாதார சிக்கல்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்க முடியாது. 100 சதவீத இருக்கைகளுடன் செயல்பட அனுமதித்து அதற்கு பதிலாக காட்சிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம் என்றும் நீதிபதிகள் யோசனை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தமிழக அரசு வரும் 21 ஆம் தேதி (திங்கள் கிழமை)க்குள் விளக்கம் தெரிவிக்க வேண்டும் தவறும் பட்சத்தில் நீதிமன்றமே உரிய உத்தரவு பிறப்பிக்க நேரிடும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர் பின்னர். வழக்கு விசாரணையை வரும் 11ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

More Tamilnadu News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்