திட்டக்குடி அருகே விபத்தில் கார் தீப்பிடித்து எரிந்ததில் மூன்று பேர் உயிரிழந்தனர். தேனி மாவட்டம் அல்லி குளத்தைச் சேர்ந்த முத்துக்குமார் மற்றும் கம்பம் போடியைச் சேர்ந்த சுப்பிரமணியன் இருவரும் கூட்டாக மோட்டார் உதிரி பாகங்கள் விற்கும் கடையை நடத்தி வருகின்றனர். இன்று காலை சுப்பிரமணியன் அவரது தாயார் முத்துலெட்சுமியுடன் காரில் சென்னைக்கு பயணமானார். செல்லும் வழியில் நண்பர் முத்துகுமார் அவரது மனைவி செல்வராணி மற்றும் மகன் ஸ்ரீசாய்ஆத்விக் ஆகியோரும் இதை காரில் சேர்ந்து பயணித்தனர்.
சென்னை நோக்கி செல்லும் பொழுது இன்று காலை மூன்று திட்டக்குடி அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கல்லூர் அருகே வந்துகொண்டிருந்தபோது கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவற்றில் மோதியது. பின்னர் அருகே இருந்த 15 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் கார் தீப்பிடித்து எரிந்தது. இதில் காரை ஓட்டி வந்த சுப்பிரமணியன் காரிலேயே தீயில் கருகி உயிரிழந்தார். அவருடைய தாய் முத்துலெட்சுமி சாலை ஓரம் தடுப்பு சுவற்றில் மோதி உயிரிழந்தார்.
மற்ற மூவரும் 15 அடி பள்ளத்தில் தூக்கி வீசப்பட்டனர். இதன் அருகில் இருந்த பொதுமக்கள் சிலர் அங்கு விரைந்து வந்து அவர்களை மீட்டு வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அதில் வழியிலேயே செல்வராணி உயிழந்தார். முத்துகுமார் மற்றும் அவரது 5வயது மகன் ஆகிய இருவரும் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து ராமநத்தம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர் .