புதுச்சேரியில் கவர்னர் கிரண்பேடியை மாற்ற கோரி முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் இரு நாட்களாக நடந்த தொடர் போராட்டம் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் ஆளும் புதுச்சேரியில் கவர்னராக கிரண்பேடியை நியமித்து நாள்முதல் கவர்னருக்கும் முதல்வர் நாராயணசாமிக்கும் கிரன்பேடிக்கும் ஏழாம் பொருத்தமாக உள்ளது. முதல்வர் ஏதாவது ஒரு திட்டத்தை அறிவிக்க கவர்னர் அதற்கு சாத்தியமில்லை என்று பதிலடி கொடுப்பார். கவர்னர் ஒரு உத்தரவைப் பிறப்பிக்க இதைச் சொல்ல அவருக்கு அதிகாரம் இல்லை என்று நாராயணசாமி பதிலடி கொடுப்பார். இப்படியாக புதுச்சேரியின் நாட்களை இருவரும் நகர்த்தி வருகின்றனர்.
இந்த நிலையில் மத்திய அரசு திரும்ப அழைத்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து போராட்டம் நடத்த இருப்பதாக முதல் அமைச்சர் நாராயணசாமி அறிவித்திருந்தார் இதன்படி நேற்று தனது போராட்டத்தை அவர் தொடங்கினார். முதல் நாள் இரவு போராட்ட களத்திலேயே படுத்து உறங்கினார். மாநிலத்தில் வளர்ச்சி ஏற்படக்கூடாது. மத்திய அரசில் இருந்து நிதி கிடைக்கக்கூடாது என்று பல்வேறு வகையில் கிரண்பேடி தடையாக இருந்ததால்தான் ஆளுநரை எதிர்த்து போராட வேண்டிய நிலை ஏற்பட்டது. புதுச்சேரியில் இரட்டை ஆட்சி முறையை பாஜக துணையுடன் கிரண்பேடி நடத்தி வந்தார்.
புதுச்சேரி மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டால் அதற்கு கிரண்பேடி தான் காரணம் என்றும் நரயணசமி தெரிவித்துள்ளார். இந்த நிலையில் திடீரென இன்று தர்ணா போராட்டத்தை முதல்வர் தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளார். பொங்கல் பண்டிகை வர உள்ளதால் அடுத்தது பல கட்ட போராட்டம் நடத்த உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஜன -22ல் கையெழுத்து இயக்கம். ஜன-29 ல் அனைத்து தொகுதிகளிலும் கண்டன ஆர்ப்பாட்டம், பிப் 5ம் தேதி உண்ணாவிரதம், பிப்-15-20 ஆம் தேதிக்குள் எதாவது ஒரு நாளில் பந்த் போராட்டம் நடத்த இருப்பதாகவும் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.