மதுரையை அடுத்த அவனியாபுரத்தில் இன்று காலை முதல் ஜல்லிக்கட்டு போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. பிற்பகல் ஒரு மணியளவில் போட்டி நடந்து கொண்டிருந்தபோது வேளாண் சட்டத்திற்கு எதிராக கோஷம் வீரகுல அமரன் இயக்கம் என்ற அமைப்பினை சேர்ந்த மருது பாண்டி, மற்றும் பால் பாண்டி ஆகிய இரு வாலிபர்கள் புதிய வேளாண் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி கோஷமிட்டபடி கருப்புக் கொடி காட்டினர் எதிர்பாராமல் நடந்த இந்த நிகழ்ச்சியால் மைதானத்தில் சிறிது நேரம் சலசப்பு ஏற்பட்டது . அங்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்து வந்து அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.அவர்களைப் பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸார் கைது செய்தனர்.
ஜல்லிக்கட்டு மைதானத்தில் கருப்புக்கொடி அவனியாபுரத்தில் இருவர் கைது
Advertisement