மதுரை வந்த ராகுல் காந்திக்கு கருப்புக்கொடி : பாஜகவினர் கைது

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த ராகுல் காந்திக்கு மதுரையில் கருப்புக் கொடி காட்டிய பாஜகவினர் 32 பேர் கைது செய்யப்பட்டனர்.

by Balaji, Jan 14, 2021, 19:58 PM IST

மத்தியில் காங்கிரஸ் ஆட்சியின்போது ஜல்லிக்கட்டு போராட்டத்திற்குத் தடை விதிக்கப்பட்டது. ஆனால் அதே காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராகுல் காந்தி இன்று ஜல்லிக்கட்டு போட்டியைப் பார்வையிட வருவது எப்படி சரியாகும்? அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி போராட்டம் நடத்த இருப்பதாக பாஜகவினர் அறிவித்தனர். இதையடுத்து மதுரை மாவட்ட பா.ஜ.க இளைஞரணி தலைவர் ஜெகதீசன் தலைமையில் 32 பேர் தெற்கு வாசல் பகுதியில் திரண்டனர். இதனால் ராஜீவ்காந்தி வரும் நேரத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் அதிகாரிகள் சிரமத்திற்கு உள்ளாகினர்.

நீங்கள் போராட்டம் நடத்துவது சரியல்ல என்று அவர்களிடம் போலீசார் தெரிவித்தபோது மோடி வந்தபோது அவர்கள் கறுப்புக்கொடி காட்டினார்களே? இதே காவல்துறை அதை ஏன் தடுக்கவில்லை அமித்ஷா வந்தபோது எதிர்ப்பு தெரிவித்தவர்களை ஒன்றும் சொல்லவில்லை. எங்களை மட்டும் ஏன் தடுக்கிறீர்கள் என்று சரமாரி கேள்வி எழுப்பினர். அவர்களைச் சமாளிக்க முடியாத போலீசார் அவர்களைக் கைது செய்வதாக அறிவித்து வேனில் ஏற்றிக் கொண்டு சென்றனர். தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் 32 பேரை போலீசார் கைது செய்தனர்.

More Tamilnadu News

READ MORE ABOUT :