மழையால் களை இழந்த பொங்கல் பண்டிகை

by Balaji, Jan 14, 2021, 20:03 PM IST

பொங்கல் திருநாள் இன்று தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் குறிப்பாக நெல்லை தூத்துக்குடி தென்காசி கடலூர் ஆகிய மாவட்டங்களில் பொங்கல் பண்டிகை களை இழந்து காணப்பட்டது . இம்மாவட்டங்களில் மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களாகப் பெய்த மழையால் பொங்கல் கொண்டாட்டம் கலை இழந்து காணப்படுகிறது.

நெல்லை மாவட்டத்தில் பாபநாசம் வசுமித்ர மணிமுத்தாறு சேரன் மகாதேவி திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் தூத்துக்குடி மாவட்டத்தில் கருங்குளம் செய்துங்கநல்லூர் சிறு வைகுண்டம் உள்ளிட்ட பகுதிகளிலும் தென்காசி மாவட்டத்தில் தென்காசி குற்றாலம் கடையநல்லூர் செங்கோட்டைக் கடையம் ஆகிய பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது கருங்குளம் செய்துங்கநல்லூர் சிறு வைகுண்டம் உள்ளிட்ட பகுதிகளிலும் தென்காசி மாவட்டத்தில் தென்காசி குற்றாலம் கடையநல்லூர் செங்கோட்டைக் கடையம் ஆகிய பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம், விருத்தாசலம், புவனகிரி, திட்டக்குடி, வேப்பூர், பண்ருட்டி, நெய்வேலி உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது கனமழையால் நெல்லை கடலூர் மாவட்டங்களில் பல ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் விவசாயிகள் பொங்கலைக் கொண்டாட முடியாமல் போனது. தைமாதத்தில் மழை பெய்வது என்பது தங்களது வாழ்நாளில் பார்த்தது கிடையாது என்றும் இது அறுவடைக் காலம் என்பதால் மழை இருக்காது அறுவடை செய்த நெல்லை இயற்கைக்குப் படைத்துக் கொண்டாடப்படும் இந்த பொங்கல் பண்டிகையில் அறுவடை செய்ய முடியாமல் தங்களது நெற்பயிர்கள் நீரில் மூழ்கி இருப்பது விவசாயிகளைக் கவலையடையச் செய்துள்ளது .

மேலும் நெற்பயிர் மட்டுமில்லாமல் உளுந்து, கரும்பு, மக்காச்சோளம், பருத்தி என அனைத்து பயிர்களும் நீரில் மூழ்கி உள்ளதால் செய்வதறியாமல் திகைத்துப் போயுள்ளனர்.பொங்கலுக்குத் தேவையான பொருட்களை வாங்கக் கூட இந்த மழையால் மக்கள் வரவில்லை என்றும் மழையில் நனைந்த மஞ்சள் கொத்துகளைக் கூட விற்க முடியாமல் தங்கள் திணறி வருவதாகவும் வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

More Tamilnadu News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை