அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு உலகப் பிரசித்தி பெற்றது இந்த ஆண்டு அங்கு கடந்த 16ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்தன. இதில் அதிக காளைகளை பிடிக்கும் வீரருக்கு கார் பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.ஆனால் முதல் பரிசான காரை கொடுப்பதில் மோசடி நடந்துள்ளது ஒரே பதிவு எண் கொண்ட டீ சட்டை அணிந்த இரண்டு பேர் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றதாக கணக்கு காட்டப்பட்டு இருக்கிறது என்று போட்டியில் பங்கேற்ற மாடுபிடி வீரர்கள் மதுரையில் இன்று ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர்.
33 என்ற பதிவினை கொண்ட டி சட்டை அணிந்த ஹரிகிருஷ்ணன் என்பவர் இரண்டு மாடுகளைப் பிடித்ததுமே காயம்பட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்சு மூலம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டு இருக்கிறார். அப்படி இருக்க அவரைத் தொடர்ந்து களமிறங்கிய கண்ணன் என்ற வீரர் பரிசு பெற்றதாகக் கணக்குக் காட்டப்பட்டு இருக்கிறது. அதாவது ஹரிகிருஷ்ணன் அணிந்திருந்த டி-ஷர்ட்டை கண்ணன் அணிந்துகொண்டு அதே பதிவு எண்ணில் மாடுகளை அடக்கியதாகவும் அவருக்கே முதல் பரிசான கார் வழங்கப்பட்டிருக்கிறது. முதல்வர் மற்றும் துணை முதல்வர் அமைச்சர் உள்ளிட்ட பலர் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் இப்படி முறைகேடுகளுக்கு அனுமதி அளிக்கக்கூடாது. முறையாக விசாரணை நடத்தி உரிய நபருக்குப் பரிசு வழங்க வேண்டும் என்று 2 ஆம் இடம் பிடித்த கருப்பண்ணன் என்ற மாடுபிடி வீரர் மாவட்ட ஆட்சியரிடம் என்று புகார் அளித்துள்ளார்.